நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது மகிளா ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
மகளிர், பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் ஒருவர் ரூ.2 லட்சம் வரை சேமித்துக் கொள்ளலாம்.
வட்டியாக 7.5 சதவீதம் வழங்கப்படும். இந்த ஃபிக்ஸட் டெபாசிட் 2 ஆண்டுகளில் முதிர்ச்சி பெறும்.
இந்த நிலையில் மக்களவையில் உறுப்பினர் ஒருவர், மகளிர் சேமிப்பு நிதி திட்டத்தில் மத்திய அரசு ஏதேனும் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதா?
ஃபிக்ஸட் டெபாசிட் தொகை ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படுமா? வட்டி உயர வாய்ப்புகள் உள்ளதா எனக் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த இணை நிதியமைச்சர் பங்கஜ் சௌத்ரி, “இந்தத் திட்டம் ரூ.2 லட்சம் மற்றும் 7.5 சதவீத வட்டியில் தொடரும்.
தற்போதுவரை திட்டத்தை மாற்றியமைக்கும் முடிவுகள் எதுவும் இல்லை. ஏனெனில் பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது. அதில் ரூ.10 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது” எனப் பதில் அளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“