ஸ்கார்பியோ-என் 6,618 கார்களையும், எக்ஸ்யூவி700 இன் 12,566 கார்களையும் மஹிந்திரா திரும்ப அழைத்துள்ளது.
இந்த பாதிக்கப்பட்ட மாடல்கள் 2022 ஜூலை 1 மற்றும் நவம்பர் 11 க்கு இடையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனை மஹிந்திரா கார் நிறுவனத்தின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
இது குறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தக் கார்கள், “சப்ளையர் ஆலையில் வரிசைப்படுத்தும் செயல்முறையின் ஏற்பட்ட பிழையின்போது பெல் ஹவுசிங்கிற்குள் உள்ள ரப்பர் பெல்லோவின் 'இயக்க பரிமாணத்தை பாதித்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், திரும்ப பெறப்பட்ட கார்களை இலவசமாக சரிபார்த்து சரிசெய்வதாக கார் தயாரிப்பாளர் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக டீலர்ஷிப்கள் ஏற்கனவே உரிமையாளர்களைத் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளன.
இவை, கார்களின் செயல்திறனைப் பாதிக்கலாம் என்பதால், இந்த சிக்கலை சரிசெய்ய அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
கார் சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மிகவும் பிரபலமாக காணப்படுகிறது. இந்த 2 ஆண்டு காலத்தில் இதுதான் முதல்முறை ஆகும்.
மஹிந்திராவின் சமீபத்திய எண்களின்படி, Scorpio-N மற்றும் Scorpio Classic ஆகியவை இணைந்து சுமார் 1.3 லட்சம் முன்பதிவுகளைக் கொண்டுள்ளன.
அவற்றில் 17,000 முன்பதிவுகள் அக்டோபர் 2022 இல் பெறப்பட்டுள்ளன. XUV700 தற்சமயம் 80,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்கார்பியோ-என் 6,618 கார்களையும், எக்ஸ்யூவி700 இன் 12,566 கார்களையும் மஹிந்திரா திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil