Mandatory gold hallmarking : இந்தியாவில் இனி விற்பனைக்கு வைக்கப்படும் தங்கம் முழுக்க முழுக்க ஹால்மார்க் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் நேற்றில் இருந்து இது நடைமுறைக்கு வந்துள்ளது. 14,18 மற்றும் 22 கேரட் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் தூய்மையை உறுதி செய்வதற்காக ஹால்மார்க் முத்திரை அவசியமாகிறது. ஆனால் இந்தியாவில் வெறும் 40% தங்க நகைகளுக்கு மட்டுமே இதுநாள் வரையில் ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தங்க நகைகளை உற்பத்தி செய்யும் 4 லட்சம் நகை உற்பத்தியாளர்களில் 35,879 நபர்களிடம் மட்டுமே பி.ஐ.எஸ். சான்று உள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல் என்ன?
ஜூன் 15ம் தேதி முதல் இந்திய நகை வடிவமைப்பாளர்கள் 14, 18 மற்றும் 22 கேரட் தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்வாரகள்.
ஹால் மார்க்கிற்கான பதிவிற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்பிட இயலும்.
குறைவான கேரட் கொண்ட தங்க நகைகளை வாங்கி ஏமாறுவதில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்கிறது இந்த அறிவிப்பு
பிஸ்மார்க், கேரட் மற்றும் தங்கத்தின் தூய்மையை அறிய 22, 18, 14 காரட் முத்திரை, ஹால்மார்க்கிங் மையத்தின் அடையாள எண் மற்றும் நகை தயாரிப்பாளரின் அடையாள எண் ஆகியவை இனி தங்க நகைகளில் கட்டாயமாக இருக்கும். எனவே வாடிக்கையாளர்கள் இதனை சரியாக ஆராய்ந்து நகைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil