Share Market News Today | Sensex | Nifty | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வார வர்த்தகத்தில் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை (ஜன.12,2024) அமர்வை லாபத்தில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 247.35 புள்ளிகள் அல்லது 1.14% உயர்ந்து 21,894.55 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 847.27 புள்ளிகள் அல்லது 1.18% அதிகரித்து 72,568.45 ஆகவும் நிறைவுற்றது.
லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் முன்னிலையில் லாபத்துடன் பரந்த குறியீடுகள் உயர்வாக வர்த்தகமாகின் வங்கி நிஃப்டி குறியீடு 271.45 புள்ளிகள் அல்லது 0.57% உயர்ந்து 47,709.80-ல் முடிந்தது.
டாப் உயர்வு, நஷ்ட பங்குகள்
இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எல்டிஐஎம்டிட்ரீ, ஓஎன்ஜிசி மற்றும் டிசிஎஸ் ஆகியவை நிஃப்டி 50 இன் பிந்தைய மணிநேரங்களில் அதிக லாபம் ஈட்டின.
எச்டிஎஃப்சி லைஃப், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், சிப்லா, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் பவர் கிரிட் ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக நஷ்டமடைந்தன.
இன்ஃபோசிஸ் பங்குகள் 7 சதவீதம் வரை உயர்வை கண்டன. சென்செக்ஸ், நிஃப்டி புதிய 52 வார உச்சத்தை எட்டியது. நிஃப்டி 50 1% க்கும் அதிகமாக உயர்ந்து புதிய 52 வார உயர்வான 21,897.10 ஐ எட்டியது.
பிஎஸ்இ சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வெள்ளிக்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகத்தில் புதிய 52 வார உயர்வான 72,619.81 ஐ எட்டியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“