இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமை (ஜன.24,2024) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 215.15 புள்ளிகள் அல்லது 1.01% அதிகரித்து 21,453.95 புள்ளிகளில் நிலைத்தது. மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 689.76 புள்ளிகள் உயர்ந்து அல்லது 0.98% உயர்ந்து 71,060.31 புள்ளிகளில் முடிவடைந்தது.
மீடியா பங்குகள்
துறைசார் குறியீடு நிஃப்டி வங்கி 67.35 புள்ளிகள் அல்லது 0.15% அதிகரித்து 45,082.40 புள்ளிகளில் நிலைத்தது. துறை ரீதியாக, மீடியா மற்றும் மெட்டல் பங்குகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
பரந்த குறியீடுகள் உயர்வில் முடிவடைந்தன, மிட்கேப் பங்குகள் அதிக லாபம் பெற்றன. பின்தங்கியவைகளில் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் எச்டிஎஃப்சி லைஃப் ஆகியவை காணப்பட்டன.
பங்குகள் நிலவரம்
ஹிண்டால்கோ, டாக்டர் ரெட்டிஸ் லேப், டாடா ஸ்டீல், பவர் கிரிட் மற்றும் ஹெச்சிஎல் டெக் ஆகியவை லாபம் ஈட்டின. செவ்வாய்க்கிழமை சரிவுக்குப் பிறகு சந்தைகள் இன்று உயர்வை கண்டுள்ளன.
எனினும் இன்றைய வர்த்தகத்தில் பெரிய பங்குகள் மட்டும் எழுச்சி கண்டன. இவைகள்தான் பங்குச் சந்தையை கட்டுப்படுத்தின.
நிஃப்டி, சென்செக்ஸ்
சந்தை நிறைவில் என்எஸ்இ (NSE) நிஃப்டி 50 1.07% உயர்ந்து 21,467.05 ஆகவும், பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 1.05% உயர்ந்து 71,112.11 ஆகவும் நிறைவடைந்தது.
ஐசிஐசிஐ வங்கி பங்குகள் வீழ்ச்சி
ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் 3.1% சரிந்து ரூ.996.65 ஆக இருந்தது. நிஃப்டி 50 இல் பங்கு முதன்மையாக பின்தங்கியிருந்தது.
ஸி (ZEE) என்டர்டெயின்மென்ட் பங்குகள் லாபம்
ஸி (ZEE) என்டர்டெயின்மென்ட் பங்குகள் 34% வரை சரிந்த நிலையில், 7.8% உயர்ந்து ரூ.168.15 ஆக காணப்பட்டது.
உச்சம் தொட்ட கனரா வங்கி
கனரா வங்கியின் காலாண்டு முடிவுகளை வங்கி அறிவித்த பிறகு, அதன் பங்குகள் 0.26% சரிந்து ரூ.454.70 ஆக இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“