தம்பதியராக அக்கவுன்ட் ஆரம்பியுங்க… டபுள் லாபம்! Post Office செம ஸ்கீம்!

நீங்கள் ஒருவருடத்தில் செலுத்தும் மொத்த முதலீட்டின் அடிப்படையில் ரிட்டர்ன்ஸ் கணக்கிடப்படும்.

Married couple will get double benefit every month under this post office scheme

Married couple will get double benefit every month under this post office scheme : சேமிப்பு மூலம் நல்ல ரிட்டர்ன்ஸ் வரும் என்கிற காலம் எல்லாம் மலையேறிவிட்ட நிலையில் உண்மையாகவே நல்ல லாபம் தரக்கூடிய சேமிப்புத் திட்டங்கள் என்ன என்பதை கண்டறிவது கடினமாகி வருகிறது. முதலீடுகள் சில இடங்களில் பாதுகாப்பானதாகவும் இல்லை. ஆனால் தபால் நிலையங்களில் வைக்கப்படும் முதலீடு 100% பாதுகாப்பானது மட்டும் நல்ல ரிட்டர்ன்ஸ் வழங்க கூடியது. கணவனும் மனைவியும் சேர்ந்து சேமிப்பு கணக்கை துவங்கும் பட்சத்தில் இது மேலும் உதவி அளிக்க கூடியதாக உள்ளது.

Monthly Income Scheme என்று கூறப்படும் இந்த வகை சேமிப்பு திட்டம் உங்களுக்கு மாதம் மாதம் வருமானத்தை வழங்கக் கூடியதாக உள்ளது. தனியாக இப்படி ஒரு கணக்கை துங்கினால் ரூ. 1000 முதல் ரூ. 4.5 லட்சம் வரை முதலீடாக செலுத்தலாம். கூட்டு கணக்காக துவங்கினால் ரூ. 9 லட்சம் வரை உங்களால் இதில் முதலீடு செய்ய முடியும். மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு நல்ல பயனளிக்க கூடிய திட்டம் இது என்றும் கூறலாம். வருட வட்டி வீதம் 6.6% ஆக உள்ளது. நீங்கள் ஒருவருடத்தில் செலுத்தும் மொத்த முதலீட்டின் அடிப்படையில் ரிட்டர்ன்ஸ் கணக்கிடப்படும்.

இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு கூட்டு கணக்கை திறந்து அதில் ரூ. 9 லட்சம் முதலீடு செய்தால் உங்களுக்கு ரிட்டர்ன்ஸாக ரூ. 59,400 கிடைக்கும். அதாவது மாதத்திற்கு உங்களுக்கு ரூ. 4950 கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு நீங்கள் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த முதலீட்டு காலத்தை நீடித்துக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Married couple will get double benefit every month under this post office scheme

Next Story
கூடுதல் வட்டி, அவசரத்திற்கு கடன், பென்ஷன்… EPFO பங்களிப்பை சாதாரணமா நினைக்காதீங்க!EPFO Tamil News: 5 Important points to know about provident fund
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express