இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் சீனா, பாகிஸ்தானும் தங்கள் நாடுகளில் புதிதாக தங்கம் இருப்பதை கண்டுபிடித்து அறிவிப்பு வெளியிட்டன. இந்நிலையில், இந்தியாவிலும் பூமிக்கடியில் மிகப்பெரிய அளவில் தங்கம் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளும் பூமிக்கடியில் உள்ள தங்கத்தைக் கண்டறிந்து, தங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்த முயற்சி செய்கின்றன. இந்த வரிசையில், இந்தியாவிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர், இதுவரை அதிக அளவில் கிடைக்கும் இரும்புத் தாதுக்களுக்குப் பெயர்பெற்ற நகரமாகவே இருந்தது. ஆனால், தற்போது இந்த நகரத்தின் அடையாளம் மாறப்போகிறது. இந்திய புவியியல் ஆய்வு அமைப்பின் (G.S..I) சமீபத்திய ஆய்வில், ஜபல்பூரில் உள்ள மக்வானா கேவல்லி (Mahangwa Kewalri) பகுதியில் மிகப்பெரிய தங்க இருப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான டன் தங்கம்:
தங்கப் புதையல் சுமார் 100 ஹெக்டேர் பரப்பளவில் பரவி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மண் மாதிரிகளை எடுத்து ரசாயனப் பகுப்பாய்வு செய்ததில், தங்கம், தாமிரம் மற்றும் பிற அரிய தனிமங்கள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இருப்பை முழுமையாக வெட்டி எடுக்கும்போது, லட்சக்கணக்கான டன்கள் தங்கம் கிடைக்கும் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.
ஜபல்பூரில் உள்ள மக்வானா கேவல்லி என்ற பகுதியில் மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில், சுமார் 100 ஹெக்டேர் பரப்பளவில், தங்கம், தாமிரம் மற்றும் பல அரிய உலோகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இருப்பை முழுமையாக வெட்டி எடுக்கும்போது, லட்சக்கணக்கான டன்கள் தங்கம் கிடைக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
பொருளாதாரத்தில் புதிய அத்தியாயம்:
ஜபல்பூரில் ஏற்கெனவே 40-க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் செயல்பட்டு வருவதால், புதிய தங்கச் சுரங்கங்களைத் தொடங்குவதற்கான செலவுகள் குறைவாக இருக்கும். இந்த கண்டுபிடிப்பு, ஜபல்பூரின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், பின்வரும் நன்மைகளையும் உருவாக்கும். பல புதிய வேலைவாய்ப்பு உருவாகும். இந்தியாவின் தங்க இறக்குமதி குறையும். இது உள்நாட்டில் தங்கத்தின் விலையைக் குறைக்கவும் வாய்ப்பு உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை இப்பகுதி ஈர்க்கும். இந்தக் கண்டுபிடிப்பு இந்திய கனிம வள ஆய்வுகளில் முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.