scorecardresearch

நேற்றைய விலையில் தொடரும் தங்கம்; கடந்த வாரத்தை விட ரேட் கம்மி

கடந்த வாரத்தை விட விலை கம்மியாக தங்கம் இன்று விற்பனையாகி வருகிறது.

May 1 2023 Gold Silver Price
சென்னையில் மே 1 2023 தங்கம், வெள்ளி விலை

Gold Rate Today : மே மாதத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி தொடர்கிறது.
அந்த வகையில் சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,630 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.45,040 ஆக விற்பனையாகிவருகிறது.
24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.6,097 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.48,776 ஆக உள்ளது. எனினும் இது கடந்த வார விலையுடன் ஒப்பிடும் போது சரிவாகும்.

ஆபரணத் தங்கம் ஏப்.26ஆம் தேதி சவரன் ரூ.45136 வரை விற்பனையானது. இன்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இது கிராமுக்கு ரூ.12 வீதம் சவரனுக்கு ரூ.96 சரிவாகும்.

வெள்ளி சரிவு

வெள்ளி நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு 20 காசுகள் சரிந்து கிராம் ரூ.80.20 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.80 ஆயிரத்து 200 ஆக உள்ளது.
வெள்ளி ஏப்.25ஆம் தேதி கிராம் ரூ.80.70 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.80 ஆயிரத்து 700 காசுகளாக விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: May 1 2023 gold silver price