Advertisment

29 பில்லியன் டாலர் நிகர சொத்து: யார் இந்த கிரண் நாடார்?

ஷிவ் நாடார், கிரண் நாடார் சந்திப்பு முதன் முதலில் விளம்பர நிறுவனம் ஒன்றில் நிகழ்ந்தது. அப்போது கிரண், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்தச் சந்திப்பு..

author-image
WebDesk
New Update
Kiran Nadar and Shiv Nadars love story

ஹெச்சிஎல் நிறுவனத்தை ஒரு பிராண்டாக மாற்றுவதில் கிரணின் பங்கு அளப்பரியது.

Kiran Nadar and Shiv Nadars love story: HCL டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடாரின் மனைவி கிரண் நாடார் ஆவார். இவர், ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் கிரண் நாடார் கலை அருங்காட்சியகத்தின் நிறுவனராகவும் உள்ளார்.

Advertisment

ஷிவ் நாடார், கிரண் நாடார் சந்திப்பு முதன் முதலில் விளம்பர நிறுவனம் ஒன்றில் நிகழ்ந்தது. அப்போது கிரண் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

பின்னாள்களில் ஹெச்சிஎல் நிறுவனத்தை ஒரு பிராண்டாக மாற்றுவதில் கிரணின் பங்கு அளப்பரியது. மேலும் கிரண் கலைகளில் ஆர்வமிக்கவர் ஆவார்.

மேலும் ஷிவ் நாடார்-கிரண் தம்பதியருக்கு ரோஷிணி என்ற மகள் உண்டு. இவர் ஷிகர் மல்ஹோத்ராவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கிரண் நாடாரின் கல்வித் தகுதி

கிரண் நாடார், டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். இவர் தனது படிப்பை முடித்த பிறகு 1970 இல், விளம்பரத் துறையில் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் (எம்சிஎம்) பயின்றார்.

அதன்மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார். விளம்பரத் துறையில் சில காலங்களுக்குப் பிறகு, அவர் தனது தாயின் ஆடை தயாரிப்பு நிறுவனமான Alumna India Pvt.க்கு உதவுவதற்காக மீண்டும் டெல்லிக்குச் செல்ல முடிவு செய்தார்.

எனினும் அவர் விளம்பர துறையில் இருந்தபோது அவருக்கு கலையின் மீது நாட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது தற்போது, உத்தரபிரதேசத்தில் இளம் முஸ்லிம் பெண்களின் கல்விக்கு ஆதரவாக SSN அறக்கட்டளை, இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (PFHI), ரசஜா அறக்கட்டளை மற்றும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

2010 இல், அவர் இந்தியாவின் முதல் தனியார் பரோபகார அருங்காட்சியகத்தைத் திறந்தார். 1988 ஆம் ஆண்டு முதல் அவர் சேகரித்த 8,000 க்கும் மேற்பட்ட நேர்த்தியான கலை பொருள்கள் இதில் உள்ளன.

இப்போது கிரண் நாடார் கலை அருங்காட்சியகம் (KNMA) என்று அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் டெல்லி NCR மற்றும் சாகேத் மற்றும் நொய்டாவில் இரண்டு கிளைகளைக் கொண்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள்

வித்யாஞான பள்ளிகள் முதல் ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் வரை, கிரண் அறக்கட்டளையின் கீழ் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன.

சொத்து மதிப்பு

இந்திய ஐடி முன்னோடியான ஷிவ் நாடார் ஆரம்ப காலத்தில் கால்குலேட்டர்கள் தயாரிக்க ஒரு சிறிய நிறுவனத்தை தொடங்கினார்.

பின்னாள்களில் ஃபோர்ப்ஸ் பத்திரிகைகளில் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு 29 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Shiv nadar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment