scorecardresearch

2023-ல் புதிய 10 பென்ஸ் கார்கள் அறிமுகம்.. விலையை கேட்காதீங்க!

நாடு முழுவதும் அதிகமான பெண்கள் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை வாங்க விரும்புவதாக நிறுவனத்தின் இந்திய தலைமை செயல்அதிகாரி தெரிவித்தார்.

Mercedes to launch 10 new cars in 2023
நடப்பாண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் 10 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

சொகுசு கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நடப்பு ஆண்டில் (2023) 10 புதிய வகை கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக வெள்ளிக்கிழமை (ஜன.6) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக Mercedes-Benz இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் CEOவுமான சந்தோஷ் ஐயர் கூறுகையில், “2023 ஆம் ஆண்டிற்கான திட்டம், ஆடம்பர பிராண்டின் உயர்மட்ட வர்த்தகத்திற்கான வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்துவதாகும்” என்றார்.

ஜேர்மன் சொகுசு கார் தயாரிப்பாளரின் இந்திய நடவடிக்கைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் இந்தியரான சந்தோஷின் கூற்றுப்படி, “இந்தியாவில் மெர்சிடிஸ் கார்களை வாங்குபவர்களின் சுயவிவரம் எஸ்-கிளாஸ் வாங்குபவர்களின் சராசரி வயதுக்கு ஏற்ப மாறிவிட்டது” என்றார்.
மேலும், “நாடு முழுவதும் அதிகமான பெண்கள் மெர்சிடிஸ் கார்களை வாங்க விரும்புவதாகவும், புதிய சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கார் வாங்குபவர்களாக உருவாகி வருவதாகவும்” சந்தோஷ் தெரிவித்தார்.

இதற்கிடையில், Mercedes-Benz India நிறுவனம், இந்தியாவில் ஒரு காலண்டர் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விற்பனையைப் பதிவுசெய்துள்ளது.
தொடர்ந்து எட்டாவது ஆண்டாக நாட்டின் சொகுசு கார் பிரிவில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் 15,822 கார்களை விற்றது, CY 2021 விற்பனையை விட 41% ஆண்டுக்கு ஆண்டு விற்பனை வளர்ச்சியைப் பதிவுசெய்தது,

மேலும், பல பல மெர்சிடிஸ் வாடிக்கையாளர்கள் கார்களை டெலிவரி செய்ய 9-12 மாதங்கள் காத்திருந்தனர் என்றும் இந்த காத்திருப்பு காலத்தை 2 அல்லது 3 மாதமாக குறைக்க நிறுவனம் விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, நிறுவனம் ஜனவரி 2 அன்று புனேவில் உள்ள சாகன் ஆலையில் இருந்து தனது 150,000வது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் காரை வெளியிட்டது.
இதற்கிடையில் நிறுவனம் இந்தாண்டு 10 புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தக் கார்களின் விலை ரூ.1 கோடியை 30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் எனத் தெரியவருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Mercedes to launch 10 new cars in 2023

Best of Express