Advertisment

மாதம் ரூ.10,000 முதலீடு; ரூ.42 லட்சம் ரிட்டன்: செம்ம ஸ்கீம்!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஸ்மால், மிட் மற்றும் லார்ஜ் கேப் ஃபண்ட்கள் உள்ளன. இதில், லார்ஜ்-கேப் ஃபண்ட்கள் பொதுவாக ரிஸ்க் குறைவான ஃபண்ட்கள் என கருதப்படுகின்றன.

author-image
WebDesk
New Update
mutual-fund

கடந்த 10 ஆண்டுகளில் 23.66 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த மிட்கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Mutual Fund | பரஸ்பர நிதிகள் எனப்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இக்காலக்கட்டத்தில் பலராலும் விரும்பப்படும் முதலீட்டு திட்டங்களாக உள்ளன.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகாலத்தில் அதிக வருமானம் அளித்த முதல் 5 மிட்கேப் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Advertisment

பொதுவாக மிட்கேப் திட்டங்கள் என்பது லார்ஜ்கேப் திட்டங்களுக்கு கீழே உள்ள முதலீட்டு விருப்பமாகும்.

1) குவாண்ட் மிட் கேப் ஃபண்ட்

இந்தத் திட்டம் 10 ஆண்டு காலத்தில் 23.66% வட்டியை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் 2018ஆம் ஆண்டுக்கு முன்பு ரூ.10 ஆயிரம் வீதம் முதலீடு செய்திருந்தால் ரூ.42.07 லட்சம் ரிட்டன் கிடைத்திருக்கும்.

2) மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட்

மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட் (மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் 30 ஃபண்ட்) கடந்த 10 ஆண்டுகள் 21.19 சதவீதம் ரிட்டன் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்திருந்தால் முதலீடு ரூ.36.83 லட்சமாக உயர்ந்திருக்கும்.

3) ஹெச்.டி.எஃப்.சி மிட்-கேப் வாய்ப்புகள் நிதி (HDFC Mid-Cap Opportunities Fund)

கடந்த 10 ஆண்டுகளில் இந்தத் திட்டம் 20.95% SIP வருமானத்தை அளித்துள்ளது. அந்த வகையில் மாதம் ரூ.10 ஆயிரம் எஸ்ஐபி ரூ.36.35 லட்சமாக உயர்ந்திருக்கும்.

4) நிப்பான் இந்தியா வளர்ச்சி நிதி

இந்தத் திட்டம் 10 ஆண்டுகளில் 20.65% XIRR ஐ வழங்கியது. ஒரு மாத SIP 10 ஆண்டுகளில் 35.78 லட்சமாக இருந்திருக்கும்.

5) எடெல்வீஸ் மிட் கேப் ஃபண்ட்

இந்தத் திட்டம் 10 ஆண்டு காலத்தில் 20.51% ரிட்டன் கொடுத்தள்ளது. திட்டத்தில் ரூ.10,000 மாதாந்திர SIP இப்போது ரூ.35.51 லட்சமாக வளர்ந்திருக்கும்.

பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட்கள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டன. ஆகவே ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் அதில் உள்ள ரிஸ்க் காரணிகள் குறித்து அறிந்துக் கொள்வது நல்லது. மேலும், திட்டத்தின் தரவுகளையும் கண்காணிக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mutual Fund
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment