குமரகுரு கல்வி நிறுவனமானது கோவையில் உள்ள சிறு,குரு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பாதுகாப்பு துறை சார்ந்த தளவாடங்களை உற்பத்திசெய்வதற்கான முயற்சிகளை ஆதரித்து வந்தது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறைவழித்தடத்தில், பாதுகாப்புத்துறை மற்றும் வான்வெளி தொழில் சார்ந்த, உள்நாட்டு உற்பத்தியைஊக்கவிக்கும் விதமாக ஒரு கருத்தரங்கம் நடத்தவிருக்கிறது.
இக்கருத்தரங்கம், இந்திய ராணுவ துறையின் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் கூட்டமைப்பு (SIDM), இந்திய தொழில் கூட்டமைப்பு(CII), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கலகம் (TIIC) மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் (TIDCO) இணைந்து குமரகுரு கல்வி நிறுவனங்களில் நடத்துகிறது.

இக்கருத்தரங்கின் அடிப்படை நோக்கம், தமிழகத்தின்மேற்கு மாவட்டம், குறிப்பாக கோவையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள், பாதுகாப்புத் துறைசார்ந்த நிறுவனங்களில் தளவாடங்களை உற்பத்தி செய்யும் பல்வேறு வாய்ப்புகளை அறிந்துகொண்டு,இந்த வாய்ப்பை பயன்படுத்தி இராணுவ தளவாடங்களின் உற்பத்தியை துவங்க வேண்டும். அது மட்டுமல்லாது இந்நிறுவனங்கள் ராணுவ துறைகளை மற்றும் வான்வழித்துறை சார்ந்த தளவாடங்களின் உற்பத்தி செய்யும் பெரும் நிறுவனங்களைப்பற்றி தெரிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
இம்முயற்சியின் பயனாக, தமிழ்நாடு பாதுகாப்புதொழில்துறை வழித்தடமானது, ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவுக்கே முன்மாதிரியாகதிகல வாய்ப்ப அமையும் எனவும்
கருத்தரங்கில் உரையாற்றிய திரு. வி கிருஷ்ணமூர்த்தி,சிறப்பு செயலர் திட்ட இயக்குனர், TIDCO தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் கூறுகையில்
ஏறத்தாழ 400 ராணுவ தளவாடங்களில் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்துள்ளது. ராணுவ தளவாடங்களைஉள்நாட்டில் உற்பத்தி செய்யும் நோக்கோடு, மத்திய அரசு ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம்கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய மூன்று ஆண்டுகளுக்குஇலக்கை நிர்ணயித்துள்ளது. உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு.
திரு ஹன்ஸ்ராஜ் வர்மா, தலைவர் மற்றும் நிர்வாகஇயக்குனர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் உளையாற்றும் போது கூறியதாவது, இந்திய ராணுவத்தின்,தளவாடங்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்திய தொழில் நிறுவனங்கள் தற்சார்புஅடைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்,தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப பயன்பாடுகளை கற்றுத் தேற அவசியம் அதிகரித்துள்ளது.
திரு ராஜேஷ் தலைவர் சொசைட்டி ஆப் இந்தியன் டிபன்ஸ்மேனுஃபேக்சரஸ், தமிழக கிளை, கூறுகையில், கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள்,இக்கருத்தரங்கை நடத்தும் மூன்றாவது கல்லூரி ஆகும். இதற்கு முன்பு ஓசூரில் சேலத்திலும்இது மாதிரியான கருத்தரங்குகள் நிறைவேறி உள்ளது.

கருத்தரங்கின் முக்கியமான நோக்கம்,தொழில் நிறுவனங்களின் மத்தியில், பாதுகாப்புத்துறை சார்ந்த தளவாடங்கள் மற்றும் வான்வெளிசார்ந்த உற்பத்திக்கான வாய்ப்புகளும் சாத்தியக்கூறுகளையும் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.
ஏறக்குறைய 150 தொழில் நிறுவனங்களில் இருந்துமற்றும் ஏழு கல்லூரிகளில் இருந்து இக்கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை