வங்கிக் கணக்கில், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்புத்தொகையை வைத்திருக்க வேண்டும் என்று என்ற தெளிவான விளக்கம் பெரும்பாலும் பலருக்கும் தெரிவதில்லை. அபாரத்தொகை பிடிக்கப்படும் போது மட்டுமே பலரும் விழித்துக் கொண்டு வங்கிகளிடம் கேள்வி எழுப்புகின்றன. இந்த குழப்பத்தை தவிர்க்கும் வகையில் 3 பேங்கில் மினிமம் பேலன்ஸ் குறித்த விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வங்கியில் இருப்புத் தொகை:
அஞ்சல் சேமிப்புக்கு பின்பு மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது வங்கி சேமிப்பே ஆகும். வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக தங்களது மினிமம் பேலனசை கவனமாக கையாள வேண்டும். அப்படி இல்லையெனில் வங்கிகளுக்கு ஏற்றார்போல் அபராதமும் விதிக்கப்படும்.
இந்த அபராதத் தொகை ஒவ்வொரு வங்கிகளுக்கு ஏற்றார் போல் மாறுபடும். எந்த வங்கிகளில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் என்று விவரமாக தெரிந்துக் கொள்ளாதவர்களுக்கு இதோ ஒரு சின்ன உதவி. எஸ்பிஐ வங்கி, ஹெச்டிஎப்சி ஐசிஐசிஐ ஆகிய 3 வங்களின் வங்கிக் கணக்கில் ஒருவர் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற விளக்கம் இதோ உங்களுக்காக..
மெட்ரோ, நகரங்கள், கிராம வங்கிகள் என்று தனித்தனியாக பிரித்து, இவற்றைச் சார்ந்தவர்கள் இருப்பு எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என்ற விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி:
எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் மெட்ரோ மற்றும் நகர வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்சம் ரூ. 3,000 வைத்திருக்க வேண்டும். நகரம் மற்றும் கிராமத்திற்கு இடைப்பட்ட செமி அர்பன்களில் இருப்பவர்கள் ரூ. 2000 வைத்திருக்க வேண்டும். அதே போல் கிராமங்களில் இருப்பவர்கள் ரூ. 1000 வைத்திருக்க வேண்டும்.
ஹெச்டிஎப்சி:
மெட்ரோ மற்றும் நகரங்களைச் சேர்ந்த சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். செமி அர்பனைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 5000 வைத்திருக்க வேண்டும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 2,500 வைத்திருக்க வேண்டும்.
ஐசிஐசிஐ:
மெட்ரோ மற்றும் நகரங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். செமி அர்ப்னைச் சேர்ந்தவர்கள் ரூ. 5000 வைத்திருக்க வேண்டும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ரூ. 2,000மும், Gramin வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ. 1,000 வைத்திருக்க வேண்டும்.
சேமிப்பு கணக்கு என்ற பெயரில் இதே வங்கிகளில் வேறு பல திட்டங்களும் உள்ளன. இந்தத் திட்டங்களில் வங்கிக் கணக்கு திறந்தால் இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியல் இல்லை என்பது கூடுதல் தகவல்.