Digital India Scheme: மாஸ்டர், விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் டெபிட் கார்டுகள் அதிகளவில் சர்வீஸ் கட்டணத்தை வசூலித்துக்கொண்டிருக்க, இந்த கார்டு மட்டும் குறைந்தகுஅளவில் மட்டுமே சர்வீஸ் கட்டணம் வசூலித்துவருகிறது.
டிஜிட்டல் இந்தியாவில் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு,ஷாப்பிங் மால்கள், கடைகள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வங்கிக்கணக்கில் இருந்து பணம் செலுத்தும் வகையிலான நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளில், டெபிட் கார்டுகளின் சேவைகளை மாஸ்டர், விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களே வழங்கிவந்தன. இந்த நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்பதனடிப்படையில் அதிகளவில் சர்வீஸ் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன.
<strong>விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..</strong>
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Mg7yzxPKiKA” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>
இந்நிலையில், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வங்கிக்கணக்கு (ஜன் தன் யோஜ்னா) திட்டத்தின் கீழ், வங்கிக்கணக்கு இல்லாத அனைவருக்கும் வங்கிக்கணக்குகள் துவக்கப்பட்டன. இவர்களுக்கு ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டன. இந்த ரூபே டெபிட் கார்டுகள் National Payments Corporation of India (NPCI) உருவாக்கப்பட்டது.
மாஸ்டர், விசா நிறுவன டெபிட் கார்டுகளை ஒப்பிடுகையில், இந்த ரூபே டெபிட் கார்டில் சேவை கட்டணம் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மற்ற நிறுவன டெபிட் கார்டுகளை போல, இந்த ரூபே டெபிட் கார்டையும் எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரூபே டெபிட் கார்டு, கேஷ் பேக் ஆபர்களை வழங்குவதோடு மட்டுமல்லாது, இன்சூரன்ஸ் கவர், எரிபொருள் நிரப்பும்போது வரி குறைப்பு, ஏர்போர்ட் லாஞ்ச்சகளில் இலவச அக்சஸ் உள்ளிட்ட சேவைகளையும் வழங்குகிறது.
ரூபே டெபிட் கார்டின் வகைகள்
ரூபே டெபிட் கார்டு : சேமிப்பு கணக்கு துவங்கும் அனைவருக்கும் இந்த ரூபே டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. ஆன்லைன் ஷாப்பிங், ஷாப்பிங் மால்கள், பிஓஎஸ் மெஷின்கள் என எல்லா இடங்களிலும் இந்த டெபிட் கார்டை பயன்படுத்தலாம்.
ரூபே கிளாசிக் டெபிட் கார்டு : இதுவும் சாதாரண டெபிட் கார்டு போன்று தான். இதில் கூடுதல் அம்சம் என்னவெனில், இந்த கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான விபத்துக்காப்பீடு வழங்கப்படுகிறது. விபத்தில் ஊனமுற்றாலும், ரூ.1 லட்சம் வரையிலான காப்பீடு வழங்கப்படுகிறது.
ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு : இந்த கார்டு பயனாளர்களுக்கு, கிப்ட் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. நாட்டில் உள்ள 30 ஏர்போர்ட்களில் உள்ள லாஞ்ச்களில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. ரூ.2 லட்சம் வரை விபத்துக்காப்பீடு வழங்கப்படுகிறது.
ரூபே முத்ரா டெபிட் கார்டு : பிரதம மந்திரியின் முத்ரா லோன் திட்டத்தின் கீழ், இந்த டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரையில் கிஷோர் மற்றும் தருண் திட்டத்தின் மூலமும், சிசு திட்டத்தின் கீழ் ரூ.5 முதல் 10 லட்சம் வரையில் கடனுதவி பெற வழிவகை செய்யப்படுகிறது.
ரூபே பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா கார்டு : அனைவருக்கும் வங்கிக்கணக்கு திட்டமான பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா திட்டத்தின் கீழ், ஜீரோ பேலன்ஸ் வங்கிக்கணக்கு திட்டத்தில் இந்த டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. இந்த கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை விபத்துக்காப்பீடு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.