எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் நோட் பண்ணிகோங்க.. உங்கள் மினிமம் பேலன்ஸ் தொகை இதுதான்!

கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ. 1,000 வைத்திருக்க வேண்டும்.

minimum balance in hdfc bank : வங்கிக் கணக்கில் ஒருவர் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ ஆகிய வங்கிகள் தங்களது இணையத்தில் தெரிவித்துள்ளன.

எஸ்பிஐ வங்கி:

எஸ்பிஐ தனது இணையத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் மெட்ரோ மற்றும் நகர வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்சம் ரூ. 3,000 வைத்திருக்க வேண்டும் என்றும், நகரம் மற்றும் கிராமத்திற்கு இடைப்பட்ட செமி அர்பன்களில் இருப்பவர்கள் ரூ. 2000 வைத்திருக்க வேண்டும் என்றும், கிராமங்களில் இருப்பவர்கள் ரூ. 1000 வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதை விட ஒரு குட் நியூஸ் இருக்குமா? அதிரடி காட்டும் கனரா வங்கி!

எச்டிஎப்சி:

மெட்ரோ மற்றும் நகரங்களைச் சேர்ந்த சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். செமி அர்பனைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 5000 வைத்திருக்க வேண்டும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 2,500 வைத்திருக்க வேண்டும். கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ஒரு காலாண்டுக்கு ரூ. 2,5000 இருப்பாக வைத்திருக்கலாம் அல்லது ஓராண்டுக்கும் சேர்த்து ரூ. 10,000 இருப்பாக வைத்துக் கொள்ளலாம் .

ஐசிஐசிஐ:

மெட்ரோ மற்றும் நகரங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். செமி அர்ப்னைச் சேர்ந்தவர்கள் ரூ. 5000 வைத்திருக்க வேண்டும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ரூ. 2,000மும், Gramin வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ. 1,000 வைத்திருக்க வேண்டும்.

டென்ஷன், அபராதம் எந்த தொல்லையும் இல்லை… எஸ்பிஐ- யில் அட்டகாசமான சேமிப்பு திட்டம்!

இந்த சேமிப்புக் கணக்குகளில் மட்டுமே வங்கிக் கணக்குகளை திறக்க வேண்டும் என்பது இல்லை. சேமிப்பு கணக்கு என்ற பெயரில் வேறு பல திட்டங்களையும் இந்த வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. அந்தத் திட்டங்களில் வங்கிக் கணக்கு திறந்தால் இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியல் இல்லை.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close