மினிமம் பேலன்ஸ் பிரச்சனை: அபராதத் தொகை நினைத்து கவலைப்படாமல் இதை செய்யுங்கள் போதும்!

minimum balance in icici bank இந்த 2 பேங்கில் மினிமம் பேலன்ஸ் அபாரத் தொகை எவ்வளவு?

minimum balance in icici bank : அஞ்சல் சேமிப்புக்கு பின்பு மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது வங்கி சேமிப்பில் அதிகப்படியான மக்கள் சந்திக்கும் பிரச்சனை மினிமம் பேலன்ஸ் தான். வங்கிக் கணக்கில், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்புத்தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற வங்கியின் விதிமுறையை பலரும் மறந்து விடுகிறார்கள்.

இதன் பயனாக வங்கிகள் அறிவிக்கும் அபராதத் தொகையை வேறு வழியின்றி கட்டுகின்றனர். ஆனால் பெரும்பாலான வங்கிகளில் அபாரத் தொகையாக எவ்வளவு ரூபார் வசூல் செய்கின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை.

இந்த குழப்பத்தை தவிர்க்கும் வகையில் பிரபலான 2 பேங்கில் மினிமம் பேலன்ஸ் அபாரத் தொகை எவ்வளவு? என்ற விளக்கம் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளது.

read more.. எஸ்பிஐ ஆன்லைன் பேக்கிங் பயன்படுத்தும் முன்பு இதையும் கொஞ்சம் கவனியுங்கள்!

ஐசிஐசிஐ வங்கி:

மெட்ரோ மற்றும் நகரங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். செமி அர்ப்னைச் சேர்ந்தவர்கள் ரூ. 5000 வைத்திருக்க வேண்டும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ரூ. 2,000மும், Gramin வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ. 1,000 வைத்திருக்க வேண்டும்.

சேமிப்பு கணக்கு என்ற பெயரில் இதே வங்கிகளில் வேறு பல திட்டங்களும் உள்ளன. இந்தத் திட்டங்களில் வங்கிக் கணக்கு திறந்தால் இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியல் இல்லை என்பது கூடுதல் தகவல்.

ஹெச்டிஎப்சி:

மெட்ரோ மற்றும் நகரங்களைச் சேர்ந்த சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். செமி அர்பனைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 5000 வைத்திருக்க வேண்டும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 2,500 வைத்திருக்க வேண்டும்.

இதை பின்பற்றாதவர்கள், மெட்ரோ மற்றும் நகர வாடிக்கையாளர்கள் 150 ரூபாய் + ஜிஎஸ்டி அபாரத்தொகையாக செலுத்த வேண்டும்.செமி அர்பனைச் சேர்ந்தவர்கள் 300 ரூபாய் + ஜிஎஸ்டி, கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 450 ரூபாய் + ஜிஎஸ்டி அபாரத்தொகையாக செலுத்த வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close