சேமிப்புக் கணக்கை, சராசரி மாதாந்திர தொகையில் வைத்திருக்க வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கிகள் வலியுறுத்தியுள்ளன.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி ஆகிய வங்கிகள் அவர்களது சராசரி தொகையை நிர்ணயம் செய்துள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா :
’சேவிங்ஸ் பேங்க்’ எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் 3000 ரூபாயை தங்களது கணக்கில் சராசரி
பராமரிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்.சிறு நகரங்களில் வசிப்போருக்கு 2000
ரூபாயும், கிராமங்களில் வசிப்போர் 1000 ரூபாயும் சேமிப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என sbi.co.in-என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் பேங்க்:
சேவிங்ஸ் பேங்க் கணக்கு வைத்திருக்கும், மெட்ரோ, நகர்புற மற்றும் சிறு நகர வாடிக்கையாளர்கள் 2000 ரூபாயை, குறைந்த பட்ச காலாண்டு சேமிப்புத் தொகையாக பராமரிக்க வேண்டும் என பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிவித்துள்ளது.
மேலும் கிராமங்களில் வசிப்போர் குறைந்த பட்சமாக 1000 ரூபாயை சேமிப்புத் தொகையாக மெயிண்டைன் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் pnbindia.in என்ற தளத்தில் இருக்கிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்:
இதில் 10000 ரூபாயை தங்களது சராசரி பராமரிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்
என மெட்ரோ மற்றும் நகரங்களில் வசிக்கும் ‘சேவிங்ஸ் பேங்க்’ வாடிக்கையாளர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறு நகரங்களில் வசிப்போருக்கு 5000, கிராமத்தினருக்கு 2000 மற்றும் பின் தங்கிய கிராமங்களில் வசிப்போருக்கு 1000 ரூபாய் என பராமரிப்புத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகமே வேண்டாம் ஹோம் லோன் வாங்க பெஸ்ட் வங்கி எஸ்பிஐ தான்!
இது குறித்து icicibank.com என்ற இணையத்தில் பார்வையிடலாம்.
எச்டி.எஃப்.சி :
இந்த வங்கியில் மெட்ரோ மற்றும் நகர்புற வாடிக்கையாளர்கள் 10000 ரூபாயை குறைந்தபட்ச பராமரிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும் என கூறப்படுகின்றது. 5000 ரூபாயை சிறுநகர வாடிக்கையாளளும் 2500 ரூபாயை கிராம புற வாடிக்கையாளர்களும் தங்களது சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்டில் பராமரிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்
என hdfcbank.com தளத்தில் கூறப்பட்டுள்ளது.
இது ‘ஜீரோபேலன்ஸ்’அக்கவுண்ட்களுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.