2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் தேதியாகும்.
இந்தக் காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டிருந்தால், பீதி அடைய வேண்டாம். உங்களுக்கு இன்னமும் வருமான வரித் தாக்கல் செய்ய காலஅவகாசம் உள்ளது.
தனிநபர்கள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 234F இன் கீழ், தாமதமான ஐடிஆர்களை தாக்கல் செய்யும் போது ரூ. 5,000 வரை அபராதம் செலுத்த நேரிடும்.
உங்களின் மொத்த வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம் ரூ.1,000 ஆக இருக்கும்.
மேலும், உங்கள் வருமானத்தை தாமதமாக தாக்கல் செய்தாலும், வீட்டுச் சொத்தில் ஏற்படும் இழப்புகளுக்கு விதிவிலக்கு உள்ளது.
இருப்பினும், நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்வதைத் தாமதப்படுத்தினால், வருமான வரிச் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் விலக்குகள் கிடைக்காது.
இருப்பினும், நீங்கள் வருமானத்தை குறைவாக அறிக்கை செய்திருந்தால், செலுத்த வேண்டிய வரியில் 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.
வரி செலுத்துவோர் காலக்கெடுவிற்குப் பிறகு வட்டியுடன் வரிகளை செலுத்தியிருந்தால், வருமானத்தை குறைவாக அறிக்கை செய்திருந்தால், மதிப்பீட்டு அதிகாரி அவரது அபராதத்தை குறைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“