scorecardresearch

52 ஏக்கர்; ரூ.1,800 கோடி முதலீடு: சென்னையில் ஏ.சி, கம்ப்ரஸர் தயாரிக்க பிரபல நிறுவனம் ஒப்பந்தம்

சென்னையில் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் கம்ப்ரசர்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க ரூ.1,819 கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளது.

Sensex rallies for 8th day straight gains 242 pts Nifty settles at 18148 metal IT stocks rally
சென்செக்ஸில் அதிகப்பட்சமாக டெக் மஹிந்திரா 2.92 சதவீதம் லாபம் ஈட்டியது.

Mitsubishi Electric India, Mahindra World City Developers மற்றும் Sumitomo Corporation of Japan ஆகியவற்றின் கூட்டு முயற்சியான Mahindra Industrial Park Chennai (MIPCL) உடன் 52 ஏக்கர் பரப்பளவில் தனது ஆலையை சென்னையில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த புதிய ஆலையின் மூலம், மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் கம்ப்ரஸர்களை உற்பத்தி செய்யும் வசதி வழங்கப்படும். இது அக்டோபர் 2025 க்குள் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் கம்ப்ரசர்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க ரூ.1,819 கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளது.

“இந்தியவில் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் விரிவடையும் பொருளாதாரம் காரணமாக, புதிய உற்பத்தி ஆலை போன்ற வசதிகள், விநியோகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உதவும்,” என்று Mitsubishi Electric India இன் நிர்வாக இயக்குநர் Kazuhiko Tamura கூறினார்.

முழுமையாக செயல்பட்டதும், தொழிற்சாலையானது மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு 300,000 யூனிட் ரூம் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் 650,000 யூனிட் கம்ப்ரஸர்களின் வருடாந்திர உற்பத்தி திறனை அடைய உதவும்.

2010 ஆம் ஆண்டில், நிறுவனம் அதன் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா மூலம் ஏர் கண்டிஷனிங் மற்றும் குளிர்பதன அமைப்புகளை இந்தியாவில் இறக்குமதி செய்யத் தொடங்கியது.

இந்த புதிய தொழிற்சாலையானது 307 ஏக்கர் பரப்பளவில், சென்னை மஹிந்திராவின் ஒரு பகுதியாக அமைக்கப்படுகிறது. இது ஜப்பான் மற்றும் தைவான் உட்பட பல நிறுவனங்களுக்கு விருப்பமான தொழில்துறை இடம் என்று கூறப்படுகிறது.

சென்னையில் Yanmar Group, Nissei Electric மற்றும் USUI Susira International உள்ளிட்ட பல ஜப்பானிய நிறுவனங்களுடன் ஏற்கனவே இத்தகைய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவற்றில், Yanmar Group இந்தியாவில் தனது முதல் டீசல் எஞ்சின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் ஒரு ஆண்டுக்கு 80,000 இன்ஜின்கள் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளை பூர்த்தி செய்யும்படி செயல்பட்டது.

இது சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் உட்பட சென்னையின் மூன்று முக்கிய துறைமுகங்களுக்கு அருகாமையில் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Mitsubishi electric to invest rs 1819 crore to set factory in chennai