Advertisment

IRCTC News: ரயில் டிக்கெட் புக்கிங்... மொபைல் எண், இ-மெயில் உடனே செக் பண்ணுங்க!

Mobile number, Email verification are mandatory for IRCTC online train ticket booking: ரயில் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றம்; உடனே இதை சரி செய்யுங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் உடனடி பணம் ரிட்டன்; IRCTC சூப்பர் ஆஃபர்

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை IRCTC மாற்றி அமைத்துள்ளது. இனி இந்த புதிய விதிமுறையைப் பின்பற்றினால் மட்டுமே பயனர்களுக்கு இருக்கை வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisment

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் பயணத்திற்காக இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயனர்கள் இந்த செய்தியை தெரிந்துக் கொள்வது நல்லது. அதாவது, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இன் கீழ் இருக்கும் Online Rail Tickets Booking Rule பிரிவில் உள்ள விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறையின் படி, IRCTC மூலம் ஆன்லைனில் டிக்கெட் வாங்குபவர்கள் இனி அவர்களின் மொபைல் எண் மற்றும் அவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் தகவலை IRCTC உடன் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சரிபார்ப்பு சரியாக நிறைவேற்றப்பட்ட பின்னர் மட்டுமே பயனர்களுக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் முன்பதிவு செய்ய பயனர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

IRCTC போர்ட்டலில் கணக்கு வைத்திருந்து, கொரோனா தொற்று காரணமாக நீண்ட நாட்களாக டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு ரயில்வே புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அத்தகைய நபர்கள் IRCTC போர்ட்டலில் இருந்து டிக்கெட்டுகளை வாங்க முதலில் தங்கள் மொபைல் எண் மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சலை IRCTC உடன் சரிபார்ப்பு செய்ய வேண்டும். அதன் பிறகுதான் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இருப்பினும், தொடர்ந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகள் இந்த செயல்முறைக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதையும் IRCTC தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வேயின் ரயில்களில் பயணிக்க IRCTC ஆனது ஆன்லைனில் டிக்கெட்டுகளை (இ-டிக்கெட்) விற்பனை செய்கிறது. டிக்கெட்டுகளுக்காக பயணிகள் இந்த போர்ட்டலில் உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும். பின்னர் அவர்களுக்கு ஆன்லைன் முன்பதிவிற்கான சேவையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும். உள்நுழைவு கடவுச்சொல்லை உருவாக்க, நீங்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி எண்ணை வழங்க வேண்டும் என்பது கட்டாயம். அதாவது, மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி எண்ணைச் சரிபார்த்த பின்னரே நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

புதிய ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதிகள் திடீரென ஏன் உருவாக்கப்பட்டது என இப்போது தெரிந்துக் கொள்ளலாம். கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் ரயில் சேவை துவங்கப்பட்டு, தற்போது ரயில் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. அதாவது கொரோனா தொற்றுக்கு முந்தைய ரயில் சேவை நிலைக்கு திரும்பி வருகின்றன. எனவே அனைத்து வழித்தடங்களிலும் பெரும்பாலான ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், டிக்கெட் விற்பனையும் அதிகரித்துள்ளது. தற்போது 24 மணி நேரத்தில் சுமார் 8 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன என்று IRCTC தெரிவித்துள்ளது.

இந்த அதிகரிக்கும் ஆன்லைன் புக்கிங் காரணமாகவும், நீண்ட நாட்களாக எங்கும் பயணிக்காமல் இருக்கும் பயனர்களின் IRCTC கணக்குகளை மீண்டும் ஆக்டிவேட் செய்வதற்கு இந்த புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் IRCTC போர்ட்டலில் உள்நுழையும் போது, ​​சரிபார்ப்பு சாளரம் திறக்கும். அதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை நீங்கள் உள்ளிட வேண்டும். இப்போது இடதுபுறத்தில் உள்ள எடிட்டிங் விருப்பம் மற்றும் வலதுபுறத்தில் சரிபார்ப்பு விருப்பம் உள்ளதை நீங்கள் காணலாம். எடிட்டிங் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் அப்னா எண் அல்லது மின்னஞ்சலை மாற்றலாம். இந்த இரண்டு தகவலையும் பயனர்கள் கட்டாயம் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

உங்கள் மொபைல் எண் மற்றும் உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்ப்பு செய்ய, நீங்கள் IRCTC பக்கத்தில் உள்ள சரிபார்ப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து செயல்முறைகளை பின்பற்றியதும், ​​உங்கள் மொபைல் எண்ணில் OTP (ஒரு முறை கடவுச்சொல்) அனுப்பப்படும். இதைச் சரியாக உங்கள் IRCTC பக்கத்தில் உள்ளிட்ட பின் உங்கள் மொபைல் எண் சரிபார்ப்பு செய்யப்படும். OTPயை எண்ணைச் சரியாய் உள்ளிட்டால் மட்டுமே உங்களின் மொபைல் எண் சரிபார்க்கப்படும். இதேபோல், மின்னஞ்சலுக்கும் சரிபார்ப்பு செய்யப்பட வேண்டும். மின்னஞ்சலில் வரும் OTP யை உள்ளிட்டு, உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்ப்பு செய்யுங்கள்.

எனவே இதுவரை மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் சரிபார்ப்பு செய்யாதவர்கள் உடனடியாக, சரிபார்ப்பு செய்து ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக தொடருங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment