மோடி திட்டம்: ரூ. 210 செலுத்தினால் ரூ. 60 ஆயிரம் கிடைக்கும்!!! எப்படி?

180042597777 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு போன் செய்தும் விவரம் தெரிந்துகொள்ளலாம்

மோடி அறிவித்துள்ள  பிரதான் மந்திரி அடல் பென்ஷன் யோஜனா  ஓய்வுதிய திட்டத்தில்,  மாதம்  ரூ. 210 செலுத்தினால் வருட முடிவில் ரூ. 60,000  பெற முடியும்.

2015 ஆம் ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்யப்பட்ட்  பட்ஜெட்டில்  ஏழைகளும் பயன்பெறும் வகையில், விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டன. இந்த திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருந்தார்.

மோடி தொடங்கி வைத்த  பிரதான் மந்திரி அடல் பென்ஷன் யோஜனா  ஓய்வுதிய திட்டத்தில்,  மாதம் ரூ. 48 முதல் 210 வரை செலுத்தி வருடத்திற்கு 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை பெற முடியும் என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த திட்டத்தில்  18 முதல் 40 வயதுள்ளோர்  இணைய முடியும். 60 வயதில் இருந்து மாத  ஓய்வூதியம் கிடைக்கும். ஆண்டு தோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை இந்த தொகையை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் சேர,  அதற்கான படிவத்தை வங்கிகளிடம் இருந்து  பெற்று நிரப்பிக் கொடுக்கலாம்.  வங்கிகளை அணுகியும் விவரம் பெறலாம். 180042597777 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு போன் செய்தும் விவரம் தெரிந்துகொள்ளலாம்

ஒரு பணியாளர் தான் 60 வயதை கடந்த பின்னர் குறைந்ததுரூ.1000 முதல் ரூ.5000 வரை ஒவ்வொரு மாதமும் பெறுவார்கள். ஒரு பணியாளர் ஓய்வூதியமாக பெறக்கூடிய தொகையானது ஒவ்வொரு மாதமும் அவர் எவ்வளவு தொகையை பங்களிக்கிறார் என்பதை பொருத்தது ஆகும்.

ஒரு நபர் எவ்வளவு குறைவான தொகை செலுத்துகிறாரோ, 60 வயதுக்கு பின் அவர் அவ்வளவு குறைவான தொகையை ஓய்வூதியமாக பெறுவார். எனவே, இந்த திட்டத்தி,ல், சேமிப்பது மூலம் ஒரு பணியாளர் மாதம்  ரூ. 60 ஆயிரம் வரை  ஓய்வூதியம் பெற முடியும்.

குறைவான ஊதியம் பெறவோருக்கு இந்த ஓய்வூதிய திட்டம் இரட்டிப்பான பலன்களை தந்து வருகிறது. ஒரு தனிநபர்  தனது  18 வயதில் மாதத்திற்கு 210 ரூபாய் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அதன் படி  அந்த நபர் ஒரு வருட முடிவில் 1,05,840 ரூபாய் முதலீடு  செய்கிறார்.இதேபோல், அவரின் முதலீடு தொடர்ந்தால்,  அவரின் 40 ஆவது வயதில் அவரின் வங்கிக் கணக்கில் ரூ.  3,48,960  இருக்கும்.

 

×Close
×Close