/tamil-ie/media/media_files/uploads/2020/07/ajith-news-reactions-13.jpg)
money investment ideas tamil money investment tips : பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள், அதிகளவில் மியூச்சுவல் பண்டுகள் மீது முதலீடு செய்து வருகிறார்கள். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் மீதான முதலீட்டை ஈர்க்கும் வகையில் தற்போது எஸ்ஐபி பெரிய அளவிலான தாக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பெரிய அளவில் பிரபலம் அடையாத துறைசார்ந்த மியூச்சுவல் பண்ட்கள் உள்ளது. இதன் மீதான முதலீட்டில் அதிக லாபமும் கிடைக்கும். ஆன்லைன் மூலமாக முதலீட்டாளர்கள் எஸ்ஐபி தவணையினைச் செலுத்தலாம் என்ற போதே மியூச்சுவல் பண்டு எளிமையாக்கப்பட்டு விட்டது.
மியூச்சுவல் பண்டில் புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்கள் அல்லது நீண்ட காலமாகவே முதலீடு செய்பவர்கள் என அனைவரும் யூபிஐ மூலமாக மொத்தமாக அல்லது எஸ்ஐபி தவணையாகப் பணத்தினைச் செலுத்தலாம்.
money investment ideas tamil money investment tips:
சிறுக சிறுக முதலீடு செய்து நல்ல லாபம் ஈட்டினால் யாருக்குத்தான் பிடிக்காது? இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினரும் முதலீடுகள் பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றனர். ஒரேயடியாக பெரிய தொகையை முதலீடு செய்து ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு ஏற்ப நிறைய முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன.கடந்த சில ஆண்டுகளாக எஸ்ஐபி முதலீட்டு முறை இளம் தலைமுறையினரை வெகுவாக ஈர்த்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை எஸ்ஐபி முறையில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் 10 முதல் 20 ஆண்டுகளில் கோடீஸ்வரராகவே ஆகிவிடலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கையில் உங்கள் பணம் பல்கி பெருகும். அதாவது, உங்களுக்கு கிடைக்கும் வட்டி வருமானத்தின் மேல் வட்டி கிடைக்கும். குறைந்தபட்சம் 15 முதல் 20 ஆண்டுகளுக்காவது எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து.
15% வருவாய் தரக்கூடிய திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம்.20 ஆண்டுகள் முடிந்தபின்னர் மெச்சூரிட்டியாக ரூ.75,79,774.875 கிடைக்கும். இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ரூ.500 மட்டும் கூடுதலாக சேர்த்து முதலீடு செய்தால் 20 ஆண்டுகளின் இறுதியில் நிச்சயமாக ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்ட முடியும்.
ஸ்டேட் பேங்கில் எல்லாமே ஈஸி…தெரிந்துக் கொள்ளுங்கள்!
';தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.