மொத்தம் 3 திட்டம்… முதலீடு செய்தால் பணத்தை அள்ளலாம்!

இறுதியில் உங்களுக்கு வரிச் சலுகைகள் போக ரூ.3,25,457 கிடைக்கும்.

By: Updated: September 30, 2020, 03:09:14 PM

money investment schemes money investment plans money : முதலீடு என்றவுடன் பல லட்சங்கள், பல கோடிகள் இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய முடியும் எனவும், சுய தொழில் செய்வோர் என பலராலும் சாதாரணமாக ரூ.500, ரூ.1000 போன்ற தொகையை வைத்தே முதலீடு செய்ய முடியும். இதற்கான சில வழிகளை இங்கே பாருங்கள்.

1. தேசிய சேமிப்பு சான்றிதழ் (National savings certificate) மத்திய அரசின் திட்டம். இதில் உங்கள் முதலீடு பாதுகாக்கப்படுவதோடு வட்டியும் உறுதியாகக் கிடைக்கும். தற்போது இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6.80% வட்டி (5 ஆண்டுகளுக்கு) கிடைக்கிறது. பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகளில் தேசிய சேமிப்பு சான்றிதழை வாங்கலாம்.

2. மியூச்சுவல் ஃபண்ட் மூலம், விலை உயர்ந்த பங்குகளில் கூட உங்களால் முதலீடு செய்ய முடிகிறது. எனவே, நம்பகத்தன்மையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதுபோக SIP முறையில் மாதம் ரூ.500 அல்லது ரூ.1000 வைத்து முதலீடு செய்யலாம்.

3. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடியும். இது பெரிய விலைமதிப்பு கொண்ட பங்குகளுக்கு பொருத்தமற்றதாக இருக்கலாம். ஆனால் ரூ.100, ரூ.200 என குறைந்த விலையில் பங்குகள் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் வெறும் ரூ.5, ரூ.6 விலைக்கு கூட பங்குகள் இருக்கின்றன. எனவே, முதலீடு செய்ய விரும்பும் நிறுவனத்தின் லாபம், வருவாய் பற்றிய விவரங்களையும், எதிர்காலத்தையும் அறிந்து முதலீடு செய்யலாம்.

4. பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF) ஓர் அருமையான திட்டம். தற்போது வருமான வரிச் சட்டப் பிரிவு 80சி கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். ஆக, மாதம் ரூ.1000 முதலீடு செய்தால் 15 ஆண்டுகளின் இறுதியில் உங்களுக்கு வரிச் சலுகைகள் போக ரூ.3,25,457 கிடைக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Money investment schemes money investment plans money investment ideas money tips

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X