புதிதாக வேலைக்கு செல்பவர்களா நீங்கள்? கொரோனா காலத்தில் பணத்தை நிர்வகிப்பது எப்படி?

காப்பீட்டு திட்டங்களை கொண்டிருக்கவில்லை என்றால் உங்கள் சேமிப்பில் கணிசமான தொகை மருத்துவ செலவிற்காக காணாமல் போகும் நிலை வரலாம்.

money matters : 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டது போன்றே தற்போதும் பெருந்தொற்றால் நாம் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம். இது போன்ற சமயங்களில் நீங்கள் வேலைக்கு தேர்வாகியிருந்தால் அல்லது உங்கள் பெற்றோர்கள் வேலை இழப்பு அல்லது சம்பள குறைப்பிற்கு ஆளாகி இருந்தால் நிச்சயமாக இது உங்களின் சேமிப்பை பாதுகாக்கும்.

கடன் தொல்லைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம்

உங்களுக்கு பிடித்த செல்போன் அல்லது லேப்டாப் என எதையும் மாதாந்திர தவணை மூலம் வாங்க சரியான காலம் இது இல்லை. பல இடங்களில் நிறுவனங்கள் அதன் சேவைகளை நிறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் சுற்றுலாத்துறைகள் முடங்கியுள்ளது. எனவே அந்த துறையில் வேலை பார்ப்பவர்கள் அல்லது வேலை எப்போது வேண்டுமானாலும் போகும் என்ற நிலையில் இருப்பவர்கள் தற்போது எந்த விதமான கடன்களையும் வாங்காமல் இருப்பது நல்லது.

எமெர்ஜென்சி நிதி

எப்போதும் உங்களுக்கு என்று குறைந்த பட்ச சேமிப்பையாவது வைத்திருக்க கற்றுக் கொள்ளுங்கள். ஏன் என்றால் இது போன்ற பொருளாதார அழுத்தம் வருகின்ற நிலையில் வேலைவாய்ப்பின்மை உருவாகின்ற நிலையில் உங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இந்த சேமிப்பு கட்டாயம் உதவும்.

போதுமான வகையில் காப்பீட்டு திட்டங்கள்

சொத்து என்பது பணம் மட்டும் அல்ல. நம்மை சுற்றி இருப்பவர்களை பாதுகாப்பதும் தான். இந்த கொரோனா காலத்தில் நாம் எதிர்பார்க்காத பல்வேறு சுகாதாரம் தொடர்பான செலவுகள் ஏற்பட்டுள்ளன. நீங்கள் காப்பீட்டு திட்டங்களை கொண்டிருக்கவில்லை என்றால் உங்கள் சேமிப்பில் கணிசமான தொகை மருத்துவ செலவிற்காக காணாமல் போகும் நிலை வரலாம். இந்த மூன்று திட்டங்களில் உங்கள் கவனத்தை திருப்பினால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Money matters starting your career amidst covid 19

Next Story
பஞ்சாப் நேஷனல் வங்கியின் FD வட்டி விகிதத்தில் மாற்றம்!Banking news in tamil: can withdraw up rs.3 lakh only in punjab national bank
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com