money plan money investment business: தபால்துறையின் சேமிப்பு மிகவும் பாதுகாப்பானது நல்ல பலன் தருவது. எந்த சேமிப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் கோடீஸ்வர்ராக முடியும் என்பதை தெரிந்துக் கொண்டால் அனைவரும் செல்வந்தர்களே...
Advertisment
தபால் துறையின் இந்த சேமிப்புத் திட்டங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். வட்டி குட்டி போட்டு கோடிக்கணக்கில் அதிகரித்துவிடும் வாய்ப்புகள் கொண்ட திட்டங்களும் தபால்துறையில் இருக்கிறது.
இந்த பட்டியலில் பொது வருங்கால வைப்பு நிதி PPF தொடர்ச்சியான வைப்புத்தொகை RD, தேசிய சேமிப்பு சான்றிதழ் NSC மற்றும் குறிப்பிட்டக் காலம் வரை பணத்தைப் போட்டு வைக்கும் Time Deposit (TD) திட்டம் ஆகியவை அடங்கும் PPFஇல், முதலீட்டாளர் ஆண்டுதோறும் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யலாம்.
அதாவது மாதத்தில் நீங்கள் அதிகபட்சமாக 12,500 ரூபாய் டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தின் முதிர்வு 15 ஆண்டுகள் என்றாலும் நீங்கள் 5-5 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். இந்த திட்டத்தில், தற்போது, வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1 சதவீதமாகும். ஆண்டுதோறும் 1.5 லட்சம் ரூபாய் என்ற விகிதத்தில் 25 ஆண்டுகள் சேமித்தால், உங்கள் மொத்த முதலீடு 37,50,000 ரூபாய் ஆகும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்வுக்கான தொகை 1.03 கோடி ரூபாயாக இருக்கும். கூட்டு வட்டியின் பலன் உங்கள் பணத்தை பல மடங்காக பெருக்கிவிடும்.
Advertisment
Advertisements
டைம் டெபாசிட், அதாவது எஃப்.டி.யில் டெபாசிட் செய்வதற்கான அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை.. தபால் நிலையத்தில் 5 ஆண்டு வைப்புத் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் 6.7 சதவீத வட்டி செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட் தொகை 15 லட்சம் என்றால் வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.7 சதவீதம். நீங்கள் 30 ஆண்டுகளில் ’நானும் கோடீஸ்வரன்’ என்று மார் தட்டிச் சொல்லலாம்.
RD திட்டத்தில் மாதந்தோறும் எவ்வளவுத் தொகை வேண்டுமானாலும் செலுத்தலாம். நீங்கள் டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச தொகைக்கு எந்தவித வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. பி.எஃப்.பைப் போலவே மாதந்தோறும் 12500 ரூபாய் செலுத்தினால், உங்களிடம் மிகப் பெரிய தொகை இருப்பில் இருக்கும். RDக்கு ஆண்டுதோறும் 5.8 சதவிகித கூட்டு வட்டி கிடைக்கும். அதிகபட்ச வருடாந்திர வைப்புத்தொகை 1,50,000 ரூபாய் என்றால், 27 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் சேர்ந்து சுமார் 99 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதில் உங்கள் மொத்த முதலீடு 40,50,000 லட்சம் ரூபாயாக இருக்கும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news