money savings money savings account money savings : எஸ்.பி.ஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனம் தங்கத்தில் முதலீடு செய்யும் வகையில் மியூச்சுவல் பண்ட் யூனிட்டுகளை வெளியிட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சொசைட்டி ஜெனரல் ஏ.எம்.சி இணைந்து எஸ்.பி.ஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தை நடத்துகின்றன.எஸ்.பி.ஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனம் தங்கத்தில் முதலீடு செய்யும் வகையில் எஸ்.பி.ஐ கோல்ட் எக்சேஞ்ச் டிரேட் ஸ்கீம் [SBI Gold Exchange Traded Scheme (SBI-GETS) ] என்ற பெயரில் யூனிட்டுகளை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம் பற்றி எஸ்.பி.ஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அசல் குமார் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த மியூச்சுவல் பண்ட் திட்டத்தின் நோக்கம், தங்கத்தை வாங்கி விற்பனை செய்வதால் கிடைக்கும் இலாபத்திற்கு சமமாக கிடைக்கச் செய்வதே என்று தெரிவித்தார்.
இந்த யூனிட்டுகளில் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம். இதன் யூனிட் மதிப்பு தினசரி வெளியிடப்படும். இதில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும்.
இதில் திரட்டப்படும் பணத்தில் 10 விழுக்காடு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். மீதம் உள்ள 90 விழுக்காடு தங்கத்தில் முதலீடு செய்யப்படும்.
இந்த யூனிட்டுகளின் முதலீட்டிற்கு ரூ.25 லட்சம் வரை 2.5% நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும். 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை 1.5%, ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை 1% வசூலிக்கப்படும். ரூ.1 கோடிக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு கட்டணம் இல்லை.
அதே நேரத்தில் யூனிட்டுகளை விற்பனை செய்யும் போது கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil