money savings scheme tamil money savings : உங்கள் வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்களுக்கு தான் இந்த பயனுள்ள தகவல். இவ்வளவு வருடம் கஷ்டப்பட்டு வயித்த கட்டி, வாய கட்டி அவர்கள் சேர்த்த பணம் அல்லது அவர்களின் வேலையின் மூலம் அவர்களுக்கு கிடைக்க போகும் ஓய்வுதிய பணம் போன்றவற்றை தயுவு செய்து வீண் செலவு செய்யாதீர்கள்.
Advertisment
வீட்டில் இருந்தப்படியே அவர்கள் காலத்துக்கும் கவுரவமாக சாப்பிடலாம். அதற்கு தான் இந்த மிகச் சிறந்த வழி வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டம். சீனியர் சிட்டிசன்களுக்கு பாதுகாப்பான நிலையான வருமானம் தர சிறந்த திட்டமாக ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் இருக்கின்றன.
தற்போது 5 ஆண்டுகாலத்திற்கு சீனியர் சிட்டிசன்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்து ஆண்டுக்கு 7% வட்டி வருமானம் பெறலாம். இதுபோக, வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்து ரூ.1.5 லட்சம் வரை வரியை சேமிக்கலாம்.
Advertisment
Advertisements
money savings scheme tamil money savings சீனியர் சிட்டிசன்களுக்கு வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் நல்ல வட்டி கொடுக்கும்
* ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் - 7.25%
* யெஸ் பேங்க் - 7.25%
* இண்டஸ் இண்ட் பேங்க் - 7.25%
* ஆர்பிஎல் பேங்க் - 7.25%
* ஏயு ஸ்மால் பைனான்ஸ் பேங்க் - 7.00%
ஈக்விட்டி, மியூச்சுவல் ஃபண்ட் என அதிக ரிஸ்க் எடுத்து முதலீடு செய்வோருக்கு, அவரவர் எடுக்கும் ரிஸ்கை பொறுத்து லாபம், இழப்பு கிடைக்கும். ஆனால், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கென பல்வேறு முதலீடுகள் இருக்கின்றன. அதிலும் முக்கியமாக ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு பாரம்பரியமாக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil