பணத்தை பெருக்கும் 2 வழிகள்.. கிளிக் ஆனா நீங்க தான் அடுத்த லட்சாதிபதி!

அதிக லாபத்தை தரக்கூடிய பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

By: Updated: September 11, 2020, 09:06:38 PM

money savings tamil money savings ideas : கஷ்டப்பட்டு சேர்த்த பணம் இருக்குப்பா.. ஆனா அத எப்படி சேமிக்கும்னு தெரியலனு புலம்புரிங்கள?.. நேரத்தை ஒதுக்கி இந்த தகவலை படிங்க. கண்டிப்பா யூஸ் ஆகும். சிறந்த முதலீடு பற்றி தெரிந்துக் கொள்ளவும் உதவும்.

உங்கள் முதலீட்டு காலம் எவ்வளவு என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். குறைந்தது 5 வருடங்களுக்காவது தேவைப்படாத பணத்தையே பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். ஏனென்றால், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில், குறுகிய காலங்களில் ஏற்ற, இறக்கம் இருப்பது சகஜம்.

money savings tamil money savings ideas :

இதைத்தவிர்த்து சில மாதங்களுக்குள் பணத்தை எடுப்பதாக திட்டமிட்டிருந்தால் லிக்விட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் பண்டுகளிலேயே முதலீடு செய்யுங்கள். பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள். மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்குள் நுழையும்போது, உங்களின் முதலீட்டு கால அளவை குறிப்பாக கவனியுங்கள். அதைப் பொறுத்தே நீங்கள் முதலீடு செய்யப் போகும் மியூச்சுவல் பண்ட் தேர்வு செய்யப்பட வேண்டும்.பங்குகளில் முதலீடு என்பது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஆபத்தை எதிர்கொள்வதைக் குறிக்கிறது.

25 வருடங்கள் கழித்து வரப்போகும் உங்கள் ஓய்வு ்காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும் எனில், அதற்கேற்றாற்போல் அதிக ரிஸ்க் உள்ள, அதே சமயத்தில் அதிக லாபத்தை தரக்கூடிய பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். அதேபோல்தான் உங்களின் வயதையும் ஒரு முக்கிய அங்கமாக திட்டத்தை தேர்வு செய்வதில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பங்குகளின் விலைகள் ஏற்ற இறக்கத்தோடு இருக்கும் என்பது உண்மை தான், குறிப்பாக நீங்கள் சில வாரங்கள் அல்லது சில மாதங்களில் ஏற்படும் மாற்றத்தைப் பார்த்தால், இது உங்களுக்குத் தெரிய வரும். ஈக்விட்டி பங்குகளின் சந்தை விலை பெரும்பாலும் குறுகிய கால உணர்வால் இயக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் 5-7 ஆண்டுகள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும்போது, ​​அடிப்படை நிறுவனத்தின் வருவாயின் தரமே மிகவும் முக்கியமானது.

உங்களிடம் தொடர்ந்து பணப்புழக்கம் இருக்கும். உங்கள் தேவையும் பல ஆண்டுகள் கழித்துதான் இருக்கும். ஆகவே, நீங்கள் அதிக ரிஸ்க் உடைய பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்து, உங்கள் அன்றாட வாழ்வுக்கு தேவையான பணத்தை முதலீடு செய்யும்போது மிகவும் குறைவான ரிஸ்க் உடைய திட்டங்களில்தான் முதலீடு செய்ய வேண்டும். ஆகவே, உங்கள் தேவை மற்றும் வயதை, மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்முன் கவனியுங்கள்.

எந்த தேவைக்காக நீங்கள் இதில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் போன்றவற்றை நீங்கள் முதலீடு செய்யப்போகும் முன் கவனிக்க வேண்டியது அவசியம். அடுத்த 6 மாதங்களில் நடக்கவிருக்கும் உங்கள் மகள் அல்லது மகனின் திருமணத்துக்காக வைத்திருக்கும் பணத்தை முதலீடு செய்ய உள்ளர்கள் எனில், அதற்கேற்றாற் போல் ரிஸ்க் இல்லாத திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Money savings tamil money savings ideas tamil money savings scheme tamil money savings in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X