ரூ.5000 முதலீட்டில் இவ்வளவு வருமானமா? தபால் துறை வழங்கும் 2 வாய்ப்புகள்

நாட்டில் ஒன்றரை லட்சம் தபால் நிலையங்கள் இருந்தாலும், அனைத்து இடங்களில் தபால் நிலையங்கள் இல்லாத காரணத்தால், இந்த பிரான்சைஸ் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நீங்கள் 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் லட்சங்களில் சம்பாதிக்கும் வாய்ப்பை தபால் நிலையம் வழங்குகிறது. தபால் நிலையம் ஃபிரான்சைஸ் தொடங்குவதன் மூலம், எளிதாக பணம் சம்பாதிக்கலாம். தற்போது, நாட்டில் ஒன்றரை லட்சம் தபால் நிலையங்கள் இருந்தாலும், அனைத்து இடங்களில் தபால் நிலையங்கள் இல்லாத காரணத்தால், இந்த பிரான்சைஸ் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

போஸ்ட் ஆபீஸ் இரண்டு விதமான பிரான்சைஸ் திட்டத்தை வழங்குகிறது. ஒன்று, தபால் நிலைய பிரான்சைஸ், மற்றொருன்று தபால்நிலைய முகவர்கள் பிரான்சைஸ். இவ்விரணடில், எது வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வீடு வீடாக சென்று போஸ்டல் ஸ்டாம்புகள் மற்றும் எழுதுப்பொருட்களை வழங்கும் நபர் போஸ்டல் ஏஜெண்ட்டுகள் அல்லது தபால் முகவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

யார் எல்லாம் போஸ்ட் ஆபீஸ் பிரான்சைஸை தொடங்கலாம்?

 • 18 வயது பூர்த்தியான நபராக இருக்க வேண்டும்.
 • இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
 • அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரத்தை கொண்டிருக்க வேண்டும்.
 • பிரான்சைஸ் தொடங்கிய விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்
 • இந்தியா போஸ்ட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு ஃபிரான்சைஸை பெற முடியும்.

எவ்வளவு சம்பாதிக்கலாம்?

 • ரெஜிஸ்டர் போஸ்ட்டுக்கு 3 ரூபாய்
 • ஸ்பீட் போஸ்ட்டுக்கு 5 ரூபாய்
 • ரூ. 100 முதல் ரூ. 200 வரையில் மணி ஆர்டருக்கு ரூ. 3.50 ரூபாய்
 • ரூ. 200க்கு மேற்பட்ட மணி ஆர்டருக்கு ரூ. 5.
 • 1000க்கும் மேற்பட்ட புக்கிஙிகள் மற்றும் ஸ்பீட் போஸ்டுகளுக்கு மாதம் 20% கூடுதல் கமிஷன்.
 • தபால்தலை, அஞ்சல் எழுதுபொருட்கள், பணம் ஆர்டர் படிவம் ஆகியவற்றின் விற்பனைத் தொகையில் 5% தொகை கமிஷன் ஆகும்.

வருவாய் முத்திரைகள், மத்திய ஆட்சேர்ப்புக் கட்டண முத்திரைகள் போன்றவற்றின் விற்பனை உள்ளிட்ட சில்லறைச் சேவைகளில் அஞ்சல் துறையின் வருமானத்தில் 40% தொகை கமிஷனாக கிடைக்கும்.

போஸ்ட் ஆபீஸ் பிரான்சைஸ் அப்ளை செய்வது எப்படி

விண்ணப்பதாரர்கள் பிரான்சைஸ் அவுட்லெட்டில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை விவரிக்கும் வணிகத் திட்டத்துடன் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்

விண்ணப்பப் படிவத்தை தபால் நிலையத்திலிருந்து நேரடியாக பெறலாம் அல்லது இந்திய அரசின் தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

படிவம் சமர்ப்பித்த பிறகு, சமந்தப்பட்ட நபருடன் தபால் துறையுடன் ஒரு ஒப்பந்தத்தில் (MoA) கையெழுத்திடும்.

நீங்கள் விண்ணப்பம் பதிவு செய்த 14 நாட்களுக்குள் தபால் கோட்ட தலைவர் உங்கள் பிரான்சைஸை உறுதி செய்துவிடுவார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Monthly income in return for rs 5000 via post office franchise scheme

Next Story
வரியும் சேமிக்கணும்; வருமானமும் வேணும்… பெஸ்ட் FD எதுன்னு பாருங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com