பேங்க்ல சேமிக்கிறதைவிட இது லாபம்: ரூ1.5 கோடி ரூபாய் ரிட்டன்… எப்படி சாத்தியம்?

ஆரம்பத்தில் மிகவும் சிறிய அளவு சேமிப்புத் தொகையாக இருந்தாலும் பிற்காலத்தில் இந்த முதலீடு மிகப்பெரிய நன்மைகளை உங்களுக்கு வழங்கும்.

Monthly investment in EPFO : வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியத்திற்காக இந்திய அரசு உருவாக்கப்பட்டது தான் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ( Employees’ Provident Fund (EPF)). ஒவ்வொரு மாதமும் நம்முடைய சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு பணம் இதில் சேமிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் மிகவும் சிறிய அளவு சேமிப்புத் தொகையாக இருந்தாலும் பிற்காலத்தில் இந்த முதலீடு மிகப்பெரிய நன்மைகளை உங்களுக்கு வழங்கும். மேலும் நீங்கள் வழங்கும் அதே அளவு பங்கீட்டை, உங்களின் நிறுவனமும் உங்களின் வைப்பு நிதிக்கு வழங்குகிறது.

இந்த 2021-22 நிதி ஆண்டில் இ.பி.எஃப்.ஓ. 8.5% வட்டியை வழங்குகிறது. இது மற்ற வங்கி சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியைக் காட்டிலும் மிகவும் அதிகமானது. இந்த வட்டியை நாம் கணக்கில் கொண்டு, ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ. 25 ஆயிரம் என்று வைத்துக் கொண்டால், அடுத்த 36 வருடங்களில் அந்நபரால் 1.65 கோடியை அந்த கணக்கில் இருந்து பெற இயலும்.

இந்த முதலீட்டில் மிகவும் நன்மையளிக்கும் விஷயம் என்னவென்றால், அவை பெரிய சம்பளத்தில் ஒரு சிறிய அளவு பணம் சேமிக்கப்பட்டு அதே நேரத்தில் வருமானம் பணவீக்க பாதுகாப்பை மட்டுமல்லாமல் அவசர உதவியையும் வழங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Monthly investment in epfo can help you get rs 1 5 crore

Next Story
புதிய ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் தொடக்கம்!RBI, Reserve Bank of India
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com