/indian-express-tamil/media/media_files/2025/04/29/66kR3LTDpb4vAQsYnZ0s.jpg)
அரசு சார்பில் வழங்கப்படும் பாதுகாப்பான திட்டத்தில் இருந்து நம்மால் சுலபமாக மாத வருமானத்தை பெற முடியும் வகையில் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அஞ்சல் அலுவலகங்களில் மாதாந்திர வருமான திட்டம் (Monthly income scheme) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 1000-ல் இருந்து அதிகபட்சமாக ரூ. 9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இது பெரும்பாலான வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தை விட அதிகமாக கருதப்படுகிறது.
ஒரு குடும்பத்திற்கு அதிகமான பணம் கிடைத்தாலோ அல்லது ஓய்வூதிய பணப்பலன் கிடைத்தாலோ இந்த மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்யலாம். அப்படி செய்யும் போது ஒவ்வொரு மாதமும் நமக்கு வருமானம் கிடைக்கும்.
உதாரணத்திற்கு ரூ. 9 லட்சத்தை இதில் முதலீடு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு 7.4 வட்டி விகிதத்தில் மாதந்தோறும் சுமார் ரூ. 5,500 வருமானமாக கிடைக்கும். இதையடுத்து, 5 ஆண்டுகள் முடிவில் நாம் முதலீடு செய்த மொத்த பணத்தையும் நம்மால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
எனினும், இதை விட அதிக வட்டி விகிதம் வழங்கக் கூடிய மற்றொரு திட்டமும் அஞ்சல் அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தேசிய சேமிப்பு பத்திரம் (National savings certificate) என்ற திட்டம் மூலம் நம்மால், அதிக வட்டி பெற முடியும்.
ஆனால், இந்த திட்டம் மூலம் மாதந்தோறும் வருமானம் பெற முடியாது. 5 ஆண்டுகளின் முடிவில் மொத்த வட்டித் தொகையையும் முதலீட்டு பணத்துடன் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். இதில், 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும், ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, உங்களுக்கு ஏற்ற திட்டம் என்னவென்று கண்டறிந்து அதில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுடைய பணத்தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து கொள்ள முடியும். பணத்தேவைகள் சரியாக பூர்த்தியாகும் போது எதிர்காலம் குறித்த அச்சமும் குறையும்.
நன்றி - Finance Boosan Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.