இந்தியப் பொருளாதாரம் மீதான தனது பார்வையை மூடி'ஸ் நிறுவனம் மாற்றியுள்ளது. இந்தியப் பொருளாதாரம் தீவிர நெருக்கடி நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. இந்தியாவின் பொருளாதார மந்தநிலை முன்பு இருந்ததைவிட தற்போது தீவிரம் அடைந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisment
இந்நிலையில், மூடீஸ் இன்வெஸ்டார்ஸ் இந்தியாவிலுள்ள சில வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை குறைத்துள்ளது. சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் சில நிறுவனங்களின் தர குறியீட்டை "நிலையானது" (Stable) என்ற மதிப்பீட்டில் இருந்து குறைந்து "எதிர்மறை" (Negative) என்ற தரக்குறியீட்டை நிர்ணயித்து இருக்கிறது.
பொதுத்துறை வங்கியில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, என்.டி.எஃப்.சி, எக்சிம் இந்தியா, ஹூரோ கார்ப், ஹட்கோ, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், கெயில், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த தரக்குறீயீட்டு பட்டியியலில் அடங்கும்.
இது தவிர தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளின் பார்வையையும் மூடிஸ் நிறுவனம் குறைத்துள்ளது. ஆக மொத்தம் இந்த நிறுவனம் கடந்த வெள்ளிக் கிழன்மையன்று 21 இந்திய நிறுவனங்களின் தர மதிப்பினைக் குறைத்துள்ளது. இது தவிர எக்ஸிம் வங்கி, ஹீரோ ஃபின்கார்ப், ஹட்கோ மற்றும் இந்திய ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனும் இதில் அடங்கும்.
இருப்பினும் இந்த தரக்குறியீட்டு நிறுவனம் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்,, சிண்டிகேட் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் மதிப்பினைக் குறைக்கவில்லை.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சரிந்து உள்ளது. விரைவில் இந்தியா பொருளாதாரா மந்தநிலையில் இருந்து மீளாவிட்டால், அது மேலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளது.