சிறிய தவறும் பெரிய பிரச்சனைக்கு வழி வகுக்கும்; ஹெல்த் இன்ஸுரன்ஸ் பாலிசியில் கவனம் தேவை

Most common health insurance mistakes even smart people make: அதிகரித்து வரும் மருத்துவ செலவினங்களை அடுத்து, இன்றைய காலங்களில் சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் அவசியமாகிவிட்டன

கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பேரழிவு சுகாதார காப்பீட்டுத் திட்டங்களுக்கான விழிப்புணர்வையும் தேவையையும் அதிகரித்து உள்ளது. அதிகரித்து வரும் மருத்துவ செலவினங்களை அடுத்து, இன்றைய காலங்களில் சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் அவசியமாகிவிட்டன. நீங்கள் ஒரு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இருந்தால், வாழ்க்கை முறை நோய்கள், பரம்பரை நோய்கள் மற்றும் விபத்து காயங்கள் ஆகியவற்றுக்கான செலவுகளிலிருந்து நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இருப்பினும், சுகாதார காப்பீட்டுத் திட்டங்களை வாங்கும்போது, ​​ஸ்மார்ட் நபர்கள் கூட பல தவறுகளைச் செய்கிறார்கள், இதன் விளைவாக காப்பீட்டு தொகை ரத்து செய்யப்படுகின்றது அல்லது அதிக மருத்துவ செலவுகள் செய்கின்றனர். ஸ்மார்ட் நபர்கள் கூட சுகாதார காப்பீட்டு திட்டங்களில் செய்யும் தவறுகளைப் பாருங்கள்:

குடும்பத்திற்கான சுகாதார காப்பீடு இல்லாதது

சனா ஹெல்த் சொல்யூஷன்ஸின் இணை நிறுவனர் மற்றும் ப்ரோமோட்டர் விவேக் நரேன் கருத்துப்படி, சுகாதார காப்பீட்டில் ஸ்மார்ட் நபர்கள் கூட செய்யும் முதல் பொதுவான தவறு என்னவென்றால், குடும்பத்திற்கு சுகாதார காப்பீடு எடுக்காதது, அல்லது குறைந்த தொகைக்கு காப்பீடு செய்வது. “அவர்கள் இளமையாக இருக்கும்போது, ​​எந்தவொரு கடுமையான நோய்க்கும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற தவறான நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் எதிர்காலத்தில் மருத்துவமனை செலவினங்களுக்காக கட்டாயமாக சேமிப்பதாக அல்லாமல் சுகாதார காப்பீட்டு பிரீமியத்தை தேவையற்ற செலவாக பார்க்கிறார்கள்,”என்று நரேன் தெரிவித்தார்.

வேலைசெய்யும் நிறுவனங்களின் சுகாதார காப்பீட்டுக் கொள்கையில் நம்பகத்தன்மை

சம்பளம் பெறும் நபர்கள் பெரும்பாலும் தங்கள் நிறுவனங்கள் வழங்கும் சுகாதார காப்பீட்டில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் வேலைகளை மாற்றும்போது அவர்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பார்கள் என்பதை உணரவில்லை. குறிப்பாக, ஓய்வூதியத்திற்குப் பிறகு குடும்ப சுகாதார காப்பீட்டைப் பெறுவது மிகவும் கடினமானதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருக்கும் என்ற உண்மையை அவர்கள் இழக்கிறார்கள்.

ஏற்கனவே இருக்கும் மருத்துவ பிரச்சனைகள் அல்லது புகையிலை பழக்கங்களை தெரிவிக்காதது

நரேன் கூற்றுப்படி, மக்கள் செய்யும் பொதுவான தவறுகளில் ஒன்று, தனிநபர் அல்லது குடும்ப சுகாதார காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் ஏற்கனவே இருக்கும் மருத்துவ பிரச்சனைகள் அல்லது ஆபத்தான பழக்கங்களை (புகையிலை அல்லது அதிகப்படியான மது அருந்துதல் போன்றவை) முழுமையாக அறிவிக்காதது ஆகும்.

“இந்த உண்மைகளை அறிவிப்பது மருத்துவ பரிசோதனைகள் அல்லது அதிக பிரீமியம் அல்லது இரண்டிற்கும் வழிவகுக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள், அவர்கள் அதைப் பற்றி அமைதியாக இருந்தால் யாருக்கும் தெரியாது. இருப்பினும், நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், காப்பீட்டு நிறுவனம் உரிமைகோரல்களை மறுக்கலாம் அல்லது பாலிசியை ரத்து செய்யலாம் என்ற உண்மையை அவர்கள் புறக்கணிக்கிறார்கள், ஏனெனில் மருத்துவர்கள் ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் மருத்துவ பிரச்சனை அல்லது ஆபத்தான பழக்கத்தைக் கண்டறிந்து விடுவார்கள். உண்மையில், நீங்கள் காப்பீட்டுத் தொகையை அதிகரிக்க முற்பட்டால், புதுப்பிக்கும் நேரத்தில் கூட உங்களுடைய எந்த மருத்துவ பிரச்சனைகளையும் பழக்கவழக்கங்களையும் முழுமையாக அறிவிக்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.

உள்ளூர் காப்பீட்டு முகவர்களை கண்மூடித்தனமாக நம்புதல்

குடும்ப சுகாதார காப்பீட்டை வாங்கும் போது மக்கள் செய்யும் மற்றொரு பொதுவான தவறு, தேவை ஏற்படும் போது தங்களது உரிமைகோரல்களுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்ற தவறான கருத்தில் “உள்ளூர் காப்பீட்டு முகவரை” கண்மூடித்தனமாக நம்புவது.

உண்மை என்னவென்றால், பாலிசி ஆவணங்களின் விவரங்களில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் துணை வரம்புகள் காரணமாக பல உரிமைகோரல்கள் மறுக்கப்படுகின்றன அல்லது குறைக்கப்படுகின்றன, அவை பெரும்பாலும் படிக்கவும் புரிந்துகொள்ளவும் மிகவும் கடினமாக இருப்பதால் நாம் அவற்றை தவிர்த்து விடுகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Most common health insurance mistakes even smart people make

Next Story
PM Kisan : கணவன், மனைவி இருவரும் தனித்தனியே ரூ. 6000 பெற முடியுமா?PM Kisan Samman Nidhi scheme
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express