Investment Scheme | Motilal Oswal NCD | மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ், ரூ. 1,000 கோடி மதிப்பிலான மாற்ற முடியாத கடன் பத்திரங்களின் (என்சிடி) முதல் பொது வெளியீட்டைத் தொடங்கியுள்ளது.
இதில் ரூ. 500 கோடி அடிப்படை வெளியீடு மற்றும் ரூ. 500 கோடிக்கு அதிக சந்தாவைத் தக்கவைக்க கிரீன்-ஷூ விருப்பத்தை உள்ளடக்கி உள்ளது.
மேலும், இந்தக் கடன் வெளியீடு ஏப்ரல் 23-மே 7, 2024 முதல் சந்தாவுக்குக் கிடைக்கும். NCDகள் BSE மற்றும் NSE இல் பட்டியலிடப்படும்.
பொதுவாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (NCD) தொடர் முதலீட்டாளர்கள் தேர்வு செய்யும் அடிப்படையில் 8.85% முதல் 9.70% வரையிலான கூப்பன் வீதத்தை ஈர்க்கும்.
இது, 24 மாதங்கள் முதல் 120 மாதங்கள் வரையிலான காலங்களைக் கொண்டிருக்கும். நிறுவனம் மாதாந்திர, ஆண்டு அல்லது ஒட்டுமொத்த அடிப்படையில் வட்டி செலுத்தும்.
வெளியீட்டு அளவுகளில், 10% நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 10% நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும், 40% HNI களுக்கும் மற்றும் 40% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படும். "முதலில் வருபவர்கள் - முன்னுரிமை" அடிப்படையில் ஒதுக்கீடு இறுதி செய்யப்படும்.
60 மாதங்கள் அல்லது 5 ஆண்டுகள் வரையிலான NCDகளின் தொடர் 5 வகைகளில், கடன் கருவியானது 8.97% கூப்பன் வீதத்தைக் கொண்டிருக்கும், மேலும் இதன் வருவாய் 9.35 சதவீதம் ஆக உள்ளது.
NCD களில் இருந்து வரும் வருமானத்தில் குறைந்தபட்சம் 75% நிறுவனமானது செயல்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஏற்கனவே உள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கும் பயன்படுத்தும். மேலும் 25% பொது நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்.
நிறுவனம் 24 மாதங்கள், 36 மாதங்கள், 60 மாதங்கள் மற்றும் 120 மாதங்கள் ஆகிய தவணைக்காலங்களில் முறையே 8.85%, 9.10%, 9.35% மற்றும் 9.70% கூப்பன் விகிதங்களை வழங்குகிறது.
பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. வங்கிகள் மூத்தக் குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கிறது. மேலும், டெபாசிட் காலத்தை பொறுத்து வட்டி விகிதங்களை நிர்ணயித்துள்ளன.
7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 3.5 சதவீதம் முதல் 9.10 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“