முன்னணி ஷாப்பிங் நிறுவனமான ஃப்ளிஃப்கார்ட்டில்,மோட்டோரோலா நிறுவன ஸ்மாட்ஃபோன்கள் பெருமளவும் விலை குறைப்பில் விற்பனை செய்யப்படுகின்றன.
மோட்டோரோலா ஸ்மார்ஃபோன்களுக்கு , ஃபோன் பிரியர்கள் மத்தியில் எப்போதுமே மவுசு அதிகம். பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 24-ம் தேதி வரை ,மோட்டோரோலா நிறுவன ஸ்மாட்ஃபோன்கள் ஃப்ளிஃப்கார்ட்டில் அதிரடியாக விலைக் குறைப்பில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த விலைக் குறைப்பால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன்பெறுவார்கள் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மோட்டோரோலா விலைகுறைப்பு சலுகையுடன் எக்சேஞ்ச் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்டின் இந்த அதிரடி ஆஃப்ரில், மோட்டோ எக்ஸ்4 ஃபோன் ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் முந்தைய விலை ரூ.20,999 ஆகும். தற்போது ரூ.2000 விலைக்குறைப்பில் இந்த ஃபோன் விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோ இசெட்2 பிளே ஸ்மார்ட்போன்ரூ.2000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.22,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, இந்த 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி ஸ்பேஸ் கொண இந்த மொபைல் மொபைல் சந்தையில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.ஃபிளிப்கார்டின் இந்த அதிரடி சேலில், விலைகுறைப்பு சலுகையுடன் எக்சேஞ்ச் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.