மோட்டர் வாகன சட்டம் 2019 : உயர்த்தப்பட்ட இன்ஸ்யூரன்ஸ் ப்ரீமியமும், அபராத தொகையும்

Motor Vehicle Act : 1000 முதல் 1500 சிசி வரையில் இருக்கு கார்களுக்கான ப்ரீமியம் ரூ. 2,863-ல் இருந்து ரூ. 3221 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது

Vehicle Insurance Policies : வளமான எக்கோ சிஸ்டம் மற்றும் இதர மேம்பாட்டு திட்டங்களை மனதில் கொண்டு புதிய மோட்டோர் வாகன சட்டம் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. மேலும் தற்போது செயல்பாட்டில் இருக்கும் வாகன காப்பீட்டு கொள்கைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது இன்ஸ்யூரன்ஸ் ரெகுலேட்டரி மற்றும் டெவலொப்மெண்ட் அத்தாரிட்டி போர்ட் ( Insurance Regulatory and Development Authority of India (Irdai)).

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

இன்ஸ்யூரன்ஸ் ரெகுலேட்டரால் கொண்டு வரப்பட்ட முக்கிய மாற்றங்கள் என்ன?

Increase in third-party premium

இன்ஸ்யூரன்ஸ் ரெகுலேட்டர் 2011ம் ஆண்டு முதல் மோட்டார் வாகனம் மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீட்டிற்கான ப்ரீமியம் (Motor Third Party (TP) Liability Insurance) கட்டணங்களை ஒவ்வொரு வருடமும் அறிவித்து வருகிறது. கடந்த வருடம் ஜூன் 16ம் தேதி முதல் 1000 சிசிக்கு மேலே இல்லாமல் இருக்கும் கார்களுக்கான டி.பி. ப்ரீமியம் ரூ. 1850-ல் இருந்து ரூ. 2072 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கட்டாயமாக்கப்பட்ட ஃபாஸ்டேக்

மேலும் 1000 முதல் 1500 சிசி வரையில் இருக்கு கார்களுக்கான ப்ரீமியம் ரூ. 2,863-ல் இருந்து ரூ. 3221 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 1500 சிசிகளுக்கு மேல் இருக்கும் கார்களுக்கான டிபி ப்ரீமியத்தின் கட்டணம் ரூ. 7890ல் இருந்து மாற்றம் ஏதும் அடையாமல் அப்படியே உள்ளது. இரு சக்கர வாகனங்களிலும் முதல் மூன்று ஸ்லாப்களில் கட்டணங்கள் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் கடைசி ஸ்லாப்பிம் மாற்றங்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. பைக்குகளில் 75 சிசியை தாண்டும் பைக்குகளுக்கான ப்ரீமியம் ரூ. 427-ல் இருந்து ரூ.482 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Increase in penalty on driving without insurance

செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் அறிமுகமான மோட்டர் வாகன சட்டத்தின் படி, முறையான காப்புரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முதன்முறை பிடிபடும் போது ரூ. 2000 வசூலிக்கப்படும். இரண்டாம் முறை பிடிபடும் போது ரூ. 4000 அபராதமாக வழங்கப்படும். மேலும் மூன்று மாத சிறை தண்டனைக்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. இந்த கட்டணம் கடந்த முறை இருந்த கட்டணங்களைக் காட்டிலும் 100% மடங்கு உயர்வானது. மேலும் 63 புதிய உட்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டு, குடித்துவிட்டு வண்டி ஓட்டுதல், உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல், வேகமாக வண்டி ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் போன்ற குற்றங்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கும் படியாக சட்டங்கள் நெறிபடுத்தப்பட்டது.

Revisiting the product structure

நவம்பர் மாதத்தில் இந்த ரெகுலோட்டரி வரைவு ஒன்றை உருவாக்கியது. அதில் வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தது. வாகனம் மொத்தமாக சிதைந்து போனால், நீர் புகுந்ததால், எண்ணெய் புகுந்தால், நட் அண்ட் போல்ட்களால் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டால் கூட காப்பீட்டுத் தொகையை வாகன உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது.

வாகனங்களின் இன்ஸ்யூரன்ஸ் செய்யப்பட்ட தொகை முதல் மூன்று ஆண்டுகளுக்கான இன்வாய்ஸ் வேல்யூவாக இருக்கும். முன்பு போன்று எக்ஸ்ஷோ-ரூம் விலையில் இன்ஸ்யூரன்ஸ் தொகை அமையாது என்று முன்மொழியப்பட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகனங்களின் மொத்த தேய்மான அடிப்படையில் தான் தேய்மான மதிப்பு இனி கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பாகங்களில் ஏற்பட்ட வெவ்வேறு தேய்மானங்களுக்கு தனித்தனியாக மதிப்பிடுதல் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : சாம்சங் கேலக்ஸியின் அடுத்த ஸ்மார்ட்போன் பெயர் என்ன?

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close