கார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - இதைத் தானே எதிர்பார்த்தோம்

Motor Insurance Premium: 2020-21 முதல் புதிய கட்டணத்திற்கான வரைவு திட்டத்தை IRDAI இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது. எனினும் தற்போதைய உத்தரவுக்கு பிறகு 2020-21...

Motor third-party Insurance Premium: கார் மற்றும் இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு தங்களது வாகன காப்பீட்டு பிரீமியத்தைப் பொருத்த வரை ஒரு நல்ல செய்தி. 2019-2020 க்கான மோட்டார் மூன்றாம் தரப்பு Liability காப்பீட்டு கவர் பிரீமியம் வீதம் 31 மார்ச் 2020 க்கு பிறகு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (Insurance Regulatory Authority of India IRDAI) 27 மார்ச் 2020 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே ஏப்ரல் 1, 2020 முதல் அனைத்து காப்பீட்டுதாரர்களும் மோட்டார் மூன்றாம் தரப்பு Liability காப்பீட்டு கவருக்கு தற்போது வசூலிக்கப்படும் பிரீமியம் கட்டணங்களை மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து வசூலிக்க வேண்டும்.


நிதியாண்டின் தொடக்கத்தில் புதிய மூன்றாம் தரப்பு கட்டணங்களை பல்வேறு வகை வாகனங்களுக்கு IRDAI அறிவித்தது. 2020-21 முதல் புதிய கட்டணத்திற்கான வரைவு திட்டத்தை IRDAI இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது. எனினும் தற்போதைய உத்தரவுக்கு பிறகு 2020-21 க்கான மூன்றாம் தரப்பு கட்டணம் 2019-20 க்கான கட்டணத்தை போலவே அப்படியே இருக்கும்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு… ஐசிஐசிஐ வங்கியின் அவசர அறிவிப்பு!

தனியார் கார் பிரிவை பொறுத்தவரை 1500 cc க்கு மேல் திறன் கொண்ட எஞ்சின் கொண்ட கார்களுக்கு மட்டும் IRDAI மூன்றாம் நபர் பிரீமியம் கட்டணத்தை நிலையாக வைத்திருக்க பரிந்துரைத்துள்ளது. 1,000 cc க்கு குறைவான திறன் கொண்ட எஞ்சின் கொண்ட கார்களுக்கு மூன்றாம் நபர் கட்டணம் ரூபாய் 2,072/- லிருந்து ரூபாய் 2182/- ஆக அதிகரித்துள்ளது. அதே போல் 1000cc க்கு மேல் அதே சமயம் 1500cc க்கு குறைவான திறன் கொண்ட எஞ்சின் கொண்ட கார்களுக்கு கட்டணம் தற்போதைய ரூபாய் 3,221/- என்பதிலிருந்து ரூபாய் 3,383/- என்று அதிக்ரித்துள்ளது. தற்போது எந்த மாற்றமும் இல்லாமல் கட்டணம் அதே போல் இருக்கும்.

இருசக்கர வாகன பிரிவில் பிரீமியம் கட்டணம் அதே போல் இருக்கும், 75cc க்கு மிகாமல் இருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய் 482/- என்று இருக்கும். 75cc க்கு அதிகமான அதே சமயம் 150cc க்கு குறைவான இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய் 752/- என்று தற்போதைய கட்டணம் மறு அறிவிப்பு வரும் வரை 2020-21 க்கு இருக்கும். அதேபோல் 150cc க்கு அதிகமான அதே சமயம் 350cc க்கு குறைவான இருசக்கர வாகனங்களுக்கு தற்போதைய கட்டணமான ரூபாய் 1193/-ம், 350cc க்கு அதிகமான இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் ரூபாய் 2323 என்று இருக்கும்.

ஊரடங்கு முடியும் வரை கார் மற்றும் இருசக்கர வாகன காப்பீட்டுத் தொகையை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்த செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close