இந்திய பணக்காரர்கள் பட்டியல் : ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடும் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறார். கடந்த 11 ஆண்டுகளாகவும் இவர் தான் முதல் இடத்தில் இருக்கிறார். ஜியோவின் வளர்ச்சிக்குப் பின்னர் இவரின் சொத்து மதிப்புகள் அதிகரித்துள்ளது.
இந்திய பணக்காரர்கள் பட்டியல்
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை கணக்கெடுப்பு மற்றும் பட்டியல்களுக்கு பெயர் பெற்றது. இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஒவ்வொரு வருடமும் அறிவிக்கும். இந்த வருட அறிவிப்பிலும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார் முகேஷ் அம்பானி. அவருடை சொத்து மதிப்புகள் சுமார் 47.3 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த வருடம் மட்டும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 9.3 பில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது.
Forbes India Rich List 2018 என்று வெளியிடப்பட்ட பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி. அவரின் சொத்து மதிப்பு சுமார் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அர்செலோர் மித்தல் குழுமத்தின் தலைவர் லக்ஷ்மி மித்தல் 18.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் ஹிந்துஜா சகோதரர்கள் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் நான்காவது இடத்தில் இருக்கின்றனர். ஐந்தாவது இடத்தில் பல்லோஜி மிஸ்ட்ரி 15.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் சொத்துக்களை வைத்திருக்கிறார்.
அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் ஷிவ் நாடார் (14.6 பில்லியன் டாலர்கள்), கோத்ரேஜ் குழுமம் (14 பில்லியன் டாலர்கள்), திலீப் சங்வி (12.6 பில்லியன்), குமார் பிர்லா (12.5 பில்லியன் டாலர்கள்) மற்றும் கௌதம் அதானி (11.9 பில்லியன் டாலர்கள்) உள்ளனர். To read this story in English
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த பெண்கள்
100 பேர் கொண்ட பட்டியலில் 4 பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இதில் மிகவும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர் பயோடெக்னாலஜி துறையில் புகழ்பெற்று விளங்கும் கிரண் மஸும்தர் ஷா. அவரின் சொத்து மதிப்புகள் கடந்த ஒரு வருடத்தில் 66.7% என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. அவர் இப்பட்டியலில் 39வது இடம் பிடித்துள்ளார்.
சர்வதேச சந்தைகளில் ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்த போதிலும் இந்த பட்டியலில் சுமார் 11 பேர் தங்களின் சொத்து மதிப்பினை 1 பில்லியன் டாலர்கள் வரை அதிகரித்துள்ளனர். இந்த பட்டியலில் ஐந்து நபர்கள் புதிதாக இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.