முத்தூட் நினன் குழுமத்தின் ஒரு பிரிவான முத்தூட் மெர்க்கன்டைல், மே 6 திங்கள் அன்று பொதுச் சந்தாவிற்கு திறக்கப்பட்ட அதன் மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (NCDs) மூலம் 75 மாதங்களில் (ஆறு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள்) முதலீட்டாளர்களின் பணத்தை இரட்டிப்பாக்க உறுதியளிக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை தளமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனம் (NBFC) பாதுகாக்கப்பட்ட மீட்டெடுக்கக்கூடிய மாற்ற முடியாத கடன் பத்திரங்களின் புதிய வெளியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் மே 17ஆம் தேதியன்று முடிவடைகிறது.
என்சிடியின் முகமதிப்பு ₹1,000 ஆகும். குறைந்தபட்ச விண்ணப்பத்திற்கு முதலீட்டாளர்கள் 10 என்.சி.டி.களை முதலீடு செய்ய வேண்டும்.
அதாவது 10,000 முதலீடு செய்ய வேண்டும். இந்த வெளியீடு ₹50 கோடியை திரட்டுவதாகும்.
இந்தத் திட்டத்தில், 75 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என்றாலும், முதலீட்டாளர்கள் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்யலாம்.
நீங்கள் 367 நாள்கள் அல்லது 18 மாதங்களுக்கு முதலீடு செய்தால், பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இருவருக்கும் 10.50 சதவிகிதம் வட்டி விகிதத்தில் கடன் பத்திரங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“