முன்னேற நினைப்பவர்களுக்கு கைக்கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டு!

இந்தியாவில் பலரும் ஐந்து வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் கீழ் முதலீடு செய்கின்றனர்.

mutual fund in tamil mutual funds
mutual fund in tamil mutual funds

mutual fund in tamil mutual funds : மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது, வங்கி மற்றும் பங்குச்சந்தையில் மேற்கொள்ளப்படும் முதலீட்டைவிட சிறந்தது. நீண்டகால நோக்கில் முதலீடு மேற்கொள்ளப்படும்போது, நம்முடைய பணம் பாதுகாப்போடு இருப்பது மட்டுமல்லாமல் அதிக வருமானமும் வழங்கக்கூடியது.

ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒவ்வொரு வகையான ரிஸ்க் இருக்கிறது. உதாரணமாக, வங்கி டெபாசிட்கணக்கில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், அதில் கிடைக்கும் லாபம் அனைவருக்கும் ஒன்றுதான். ஏதாவது ரிஸ்க் என்றாலும் அனைவருக்கும் ஒன்றுதான். பங்குச்சந்தை, ரியல்எஸ்டேட், தங்கம் எனப் பல வகையான முதலீடுகள் இருந்தாலும், அதில் இருக்கும் ரிஸ்க்கின் அளவு கிட்டத்தட்ட அனைவருக்கும் சமம். ஆனால், உங்களின் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு ஏற்ப முதலீட்டுத் திட்டங்கள் இருப்பது மியூச்சுவல் ஃபண்டில்தான்.

பலர் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதற்கான முக்கிய காரணம் அதிக லாபம் பெற இயலும் என்பதே காரணமே. ஆனால் இதில் நிறைய ரிஸ்க் இல்லாமலும் இல்லை. இந்தியாவில் பலரும் ஐந்து வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் கீழ் முதலீடு செய்கின்றனர். அவை ஈக்விட்டி ஃபண்ட் (Equity Fund), டெப்ட் ஃபண்ட் (Debt Fund), பேலன்ஸ்டு ஃபண்ட் (Balanced Fund), பணச்சந்தை முதலீடுகள் (Money market investments), பத்திர முதலீடுகள் (Bond investments) இதில் முதல் 3 மியூட்சல் திட்டங்கள் பற்றி பார்க்கலாம்.

ஈக்விட்டி ஃபண்ட்:

இந்த வகை ஃபண்டுகள் முதலீடுகள் பெரும் பணத்தில் பெரும் பகுதியை பங்குகளாக முதலீடு செய்யப்படுகின்றன.இவற்றில் சந்தை அபாயங்கள் அதிகம். அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ள முதலீட்டாளர்களுக்கு இது உகந்தது.

டெப்ட் ஃபண்ட்:

இந்த வகை முதலீட்டில் பெரும்பாலான முதலீட்டு பணம் நிறுவனக்கடன், வங்கிகள் வழங்கும் கடன், பரிசுப் பொருட்கள் மற்றும் அரசு கடன் பத்திரங்கள் உள்ளிட்ட கடன் திட்டங்களில் மூலம் முதலீடு செய்யப்படும். சந்தை அபாயங்களை தவிர்க்க நினைப்பவர்களுக்கு இது சரியான முதலீடு. இதில் வருமானம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று.

பேலன்ஸ்டு ஃபண்ட்:

இந்த வகையில் முதலீட்டு பணமானது பங்குகள் மற்றும் கடன்கள் ஆகிய இரண்டிலும் முதலீடு செய்யப்படுகின்றன.சந்தை நிலைகளுக்கேற்ப அவ்வப்போது முதலீட்டு உக்திகளை மாற்றுவது இதில் பொதுவானது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mutual fund in tamil mutual funds types mutual fund news in tamil mutual fund investment

Next Story
ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் கொடுத்து வைத்தவர்கள்! இத்தனை சலுகைகளா?iob savings account iob account
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com