இந்தியாவில் ஓய்வு பெறும் வயது 60. பொதுவாக ஓய்வு காலத்தை மனத்தில் வைத்து மக்கள் சேமித்து வருகின்றனர். இருப்பினும் தனது வாழ்நாள் முழுவதும் போதுமான அளவு பணத்தை சேமித்து வைத்திருந்தால் ஒருவர் முன்னதாகவே ஓய்வு பெறலாம். அதற்கு முன்கூட்டியே முதலீடு செய்வதை தொடங்க வேண்டும். குறைந்தது 25 வயதில் இருந்து சேமிப்பை தொடங்க வேண்டும். பணத்தை சேமிக்கவும் முதலீடு செய்யவும், பெருக்கவும் எஸ்ஐபி நல்ல முறையாக கருதப்படுகிறது. எஸ்ஐபி என்பது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து முதலீடு செய்வது. வழக்கமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யப்படுகிறது.
Systematic Investment Plan என்பதே சுருக்கமாக எஸ்ஐபி என அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் மாதந்தோறும் அல்லது காலாண்டு என குறிப்பிட்ட காலக்கெடுவில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்த முறை வழிவகுக்கிறது. எல்லா வகையான முதலீட்டளார்களுக்கு ஏற்ற திட்டம் இது. குறிப்பாக பங்குச்சந்தை முதலீடு சிக்கலானவை என நினைப்பவர்களுக்கு இந்த முறையில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பங்கேற்கலாம். தேவை எனில் எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை அதிகரித்து கொள்ளலாம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தொடரலாம்.
உதாரணமாக 50 வயதில் ஓய்வு பெற விரும்பினால் 25 வயதில் முதலீட்டை தொடங்க வேண்டும்.
50வயதிற்குள் ரூ.10 கோடி சேமிப்பை உருவாக்க விரும்பினால் முன்பே திட்டமிட வேண்டும். ஆண்டுக்கு 12 முதல் 15 விழுக்காடு வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டு தொகையை 10% அதிகரிக்க வேண்டும்.
எஸ்ஐபி கால்குலேட்டரை பயன்படுத்தினால் 50 வயதில் 10 கோடி ரூபாய் சேமிப்பை உருவாக்க வேண்டுமெனில் 25 வயதில் முதல் மாதம் ரூ.26000 முதலீடு செய்ய வேண்டும். தொகை அதிகம் என்றால் தேவைகேற்ப முதலீடு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil