5 ஆண்டுகளில் 96 சதவீத வளர்ச்சி இந்த லார்ஜ் கேப் ஃபண்டுகள் தெரியுமா?
கடந்த 5 மற்றும் 10 ஆண்டுகளில் சிறப்பான வருவாய் கொடுத்த லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம். இந்தப் ஃபண்டுகள் அதிகப்பட்சமாக 100 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சியை கொடுத்துள்ளன.
Mutual Fund | ஸ்திரத்தன்மைக்கு பெயர் பெற்ற லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் மிட் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளை விட சிறப்பாக செயல்படுகின்றன. பொதுவாக லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் முதலீட்டாளர்களால் நன்கு அறியப்பட்டவை. நீண்ட வெற்றி வரலாறுகளுடன், திடீர் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு குறைவான பாதிப்புக்குளாகின்றன.
Advertisment
அந்த வகையில் கடந்த 5 மற்றும் 10 ஆண்டுகளில் சிறப்பான வருவாய் கொடுத்த லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.
மியூச்சுவல் ஃபண்டு
5 ஆண்டு வருவாய் (%)
10 ஆண்டு வருவாய் (%)
ஜே.எம் லார்ஜ் கேப் ஃபண்டு
84.04
140.32
பரோடா பி.என்.பி பரிபாஸ் லார்ஜ் கேப் ஃபண்டு
79.94
151.79
நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்டு
96.83
168.79
கனரா ரோபேக்கோ ப்ளூசிப் ஃபண்டு
70.27
149.94
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ப்ளூசிப் ஃபண்டு
83.46
154.84
மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் லார்ஜ் கேப் ஃபண்டுகள் ஆபத்து காரணிகள் குறைந்தவை என முதலீட்டு நிபுணர்களால் வரையறுக்கப்படுகின்றன. மேலும், லார்ஜ் கேப் ஃபண்டுகள் மிட் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகள் போன்று திடீர் வளர்ச்சியை கொடுக்கவல்லது கிடையாது. மாறாக ஸ்திரதன்மையுடன் கூடிய நிலையான வளர்ச்சியை அளிக்கின்றன. அதாவது, சிறிய ஸ்டார்ட்அப்கள் போல லார்ஜ் கேப் நிறுவனங்கள் விரைவாக வளரவில்லை என்றாலும், நிலையான வளர்ச்சியின் வரலாற்றைக் கொண்டுள்ளன. எனவே நிலையான, நீண்ட கால மூலதனத்தை உருவாக்க விரும்பும் எவருக்கும் அவை சிறந்த தேர்வாகும்.
மேலும், மிட் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, லார்ஜ்கேப் ஃபண்டுகள் குறைவான ரிஸ்க் ப்ரொஃபைலைக் கொண்டுள்ளன. இதனால், ஓய்வு பெறுவதை நெருங்கி வருபவர்கள் இந்தத் நிறுவனங்களில் பெரும்பாலும் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இது தவிர லார்ஜ் கேப் ஃபண்டுகளில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது எளிது. எனினும் பங்குச் சந்தை முதலீடு நிதி இழப்புக்கும் வழிவகுக்கும் என்பதால் இதில் கவனத்துடன் முதலீடு செய்வது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“