தெரிந்து கொள்வோம்: மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?

யூனிட்களை யாரேனும் வாங்க விரும்பினால என்ன செய்ய வேண்டும்?

யூனிட்களை யாரேனும் வாங்க விரும்பினால என்ன செய்ய வேண்டும்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
savings account

ஒரு முதலீட்டாளர், பங்குச்சந்தை மற்றும் பங்குகள் குறித்த விபரங்களை அறிந்துகொள்வதற்காக மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.இந்த மியூச்சவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மொத்தமாக பங்குகளை வாங்கவும் விற்கவும் நிறுவனங்கள் முற்படும்.

Advertisment

உதாரணமாக, சூப்பர் ரிட்டன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் என்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை சூப்பர் அசர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது என்றால், இத்திட்டத்தின் கீழ் பல முதலீட்டாளர்கள் மூலம் சுமார் 100 கோடி ரூபாய் நிதியை திரட்டி அதனை பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டம் ஈக்விட்டி திட்டம் என்றால் பங்குச்சந்தையில் அதிகளவில் முதலீடு செய்யப்படும், டெபிட் ஃபண்ட்ஸ் திட்டமாக இருந்தால் அரசு முதலீட்டு பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்களில் அதிகளவில் முதலீடு செய்யப்படும்.

தற்போது நீங்கள் தேர்ந்தெடத்துள்ள திட்டத்தில் ஒரு யூனிட் 10 ரூபாய்க்கு அளிக்கப்படுகிறது. சுமார் 1000 யூனிட்களை 10 ரூபாய் வீதம் 10,000 ரூபாய் தொகையை திட்டத்தில் முதலீடு செய்தால். ஒரு வருட காலத்தில் சூப்பர் ரிட்டன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் கீழ் முதலீட்டடின் பெறுமதி 12 ரூபாயாக உயரம்.

Advertisment
Advertisements

எஸ்பிஐ-யில் மினிமம் பேலன்ஸ் ரூல்ஸ் ரொம்ப கவனம் தேவை.. கொஞ்சம் மீறினாலும் அபராதம் தான்!

மேலும் இத்திட்டதை விற்றால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் மதிப்பு 12 ரூபாயாக மதிப்பீட்டில் 1000 யூனிட்களை 12,000 ரூபாய்க்கு விற்கலாம். உங்கள் யூனிட்களை யாரேனும் வாங்க விரும்பினால என்ன செய்ய வேண்டும்?

யூனிட்களின் மதிப்பு 12 ரூபாயாக அதிகரித்துள்ளதால், புதிதாக வாங்கும் நபருக்கு நீங்கள் 12 ரூபாய் மதிப்பீட்டில் விற்பனை செய்யலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: