New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/03/money2up.jpg)
எஸ்.பி.ஐ. வழங்கும் இந்த மகத்தான மீச்சுவல் இன்வெஸ்ட்மெண்ட் குறித்து நீங்களும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
Mutual Funds SIP : நம்முடைய ஒவ்வொருத்தர் கனவும் எந்த ஒரு காலத்திலயும் யார் கிட்டையும் கடனே வாங்கக்கூடாது அப்டின்றது தான். இதுக்காக நாம என்ன செய்வோம்? எப்பவும் கொஞ்சம் பணத்தை சேத்து வச்சுப்போம். ஆனால் நம்மள சிலருக்கு எப்படி நம்ம கிட்ட இருக்குற பணத்தை முதலீடு செஞ்சா எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும் அப்டின்ற விசயம் தெரியாம முழுச்சுட்டு இருப்போம்.
ஒரு 20 ஆண்டு கால சேமிப்பு திட்டம் பத்தி தான் இங்க இப்போ நாம பாக்க போறோம். மீச்சுவல் ஃப்ண்ட் எஸ்.ஐ.பி.யில் மாதம் 4500 ரூபாய் முதலீடு செய்தால் 20 ஆண்டுகளில் நிச்சயமாக நீங்கள் கோடீஸ்வரர் தான் என்கிறது இந்த திட்டம்.
இது போன்ற மிக நீண்ட திட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும் ஒரு மிகச்சிறந்த விசயம் என்னவென்றால் 15% ரிட்டர்ன்ஸ் தான். மேலும் உங்களுக்கு கிடைக்கும் வட்டிக்கும் வட்டி கிடைக்கும். ஆக இது மிகப்பெரிய சேமிப்பு முதலீட்டு திட்டமாக தான் இருக்க வேண்டும். இதனை எப்படி முறையாக முதலீடு செய்ய வேண்டும் என்பதை கீழே சொல்கின்றோம்.
மாதத்திற்கு ரூ. 4500 என்று 20 வருடங்களுக்கு கணக்கு வைத்துக் கொண்டால் உங்களுக்கு 20 வருட முடிவில் ரிட்டர்ன்ஸ் அனைத்தும் சேர்த்து 68,21,797.387 பணம் கிடைக்கும். ஆனால் அதில் ஒரு சின்ன மாற்றம் உங்களுக்கு அதிக அளவில் உதவியாக இருக்கும். ஆண்டுக்கு டாப்-அப்பாக நீங்கள் ரூ. 500 சேர்க்க வேண்டும். அப்போது உங்களுக்கு 1,07,26,921.405 பணத்தை நீங்கள் திரும்ப பெறலாம். எஸ்.பி.ஐ. வழங்கும் இந்த மகத்தான மீச்சுவல் இன்வெஸ்ட்மெண்ட் குறித்து நீங்களும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.