/tamil-ie/media/media_files/uploads/2023/06/ls-money-2.jpg)
மியூச்சுவல் ஃபண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட்களை (FDs) முந்தியதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக 2023 உள்ளது.
mutual-fund | fixed-deposits | சேமிப்புக் கணக்குகள் மீதான நம்பிக்கை இந்தியர்களிடையே அசையாது. பணப்புழக்கம், அணுகுவது எளிமை மற்றும் பெயரளவிலான ஆபத்து ஆகியவை சேமிப்பு கணக்குகள் மீது மக்களுக்கு நம்பிக்கையை அதிகப்படுத்துகின்றன.
பெயரளவு வட்டி விகிதத்தை வழங்கும் போதும் குறுகிய கால நிதி தேவைகளை பூர்த்தி செய்கின்றன. பணப்புழக்கம் மற்றும் பாதுகாப்பிற்கான இந்த விருப்பம் இந்தியாவில் பலர் பின்பற்றும் நடைமுறையாக உள்ளது.
இதற்கிடையில், சுவாரஸ்யமாக, மியூச்சுவல் ஃபண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட்களை (FDs) முந்தியதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக 2023 உள்ளது.
இந்தியா முழுவதும், சேமிப்பு வங்கிக் கணக்குகள் மிகவும் பிரபலமாக உள்ளன. ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் அனைவராலும் விரும்பப்படுகிறது.
அதேநேரத்தில் பெண்கள் மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பெரும்பாலும் விரும்புவதில்லை. ஆண்கள்தான் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்கின்றனர்.
இதற்கிடையில், மியூச்சுவல் ஃபண்டுகளின் அதிகரித்துவரும் பிரபலம் காரணமாக, நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்) மற்றும் பங்குகள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.
ஆண்களை பொறுத்தவரை சேமிப்பில் சேமிப்பு கணக்குகள் முதலிடத்தில் உள்ளன. அடுத்த இடங்களில் மியூச்சுவல் பண்ட், ஃபிக்ஸட் மற்றும் ஆர்.டி, பங்குகள், காப்பீடு, தங்கம், பிபிஎஃப், கிரிப்டோ, ரியல் எஸ்டேட், அஞ்சல சிறுசேமிப்பு திட்டங்கள், செக்யூரிட்டிஸ், அரசு பத்திரங்கள், புதிய பென்சன் திட்டம், அந்நிய செலாவணி உள்ளிட்டவை உள்ளன.
அதேநேரத்தில் பெண்கள் சேமிப்பு கணக்கில் 76 சதவீதம் முதலீடு செய்துள்ளனர். அடுத்த இடத்தில் எஃப்.டி மற்றும் ஆர்.டி, மியூச்சுவல் பண்ட், காப்பீடு, பங்கு, தங்கம், பிபிஎஃப், கிரிப்டோ, ரியல் எஸ்டேட், அஞ்சல சிறுசேமிப்பு திட்டங்கள், பெருநிறுவன மற்றும் அரசு பத்திரங்கள், புதிய பென்சன் திட்டம், அந்நிய செலாவணி திட்டம் உள்ளிட்டவை உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.