/tamil-ie/media/media_files/uploads/2019/02/PAN-Card-Aadhar-Card-Link.jpg)
Aadhaar address changing norms becoming very easy
My Aadhaar Online Contest 2019 : வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் கார்டு பயனர்களுக்கான புதிய போட்டியை UIDAI ஆதார் தற்பொழுது அறிவித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் வெற்றியாளருக்கு ரூ.30,000 பரிசுத் தொகையாக வழங்கப்படுமென்றும் ஆதார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மட்டுமின்றி முக்கிய அடையாள அட்டையாக 'ஆதார்' பயன்படுத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் ஆதார் தொடர்பான சேவைகள் அனைவருக்கும் சேரும் வகையில் புதிய போட்டியினை மத்திய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவித்துள்ளது.
My Aadhaar Online Contest by UIDAI: போட்டியின் விதிமுறைகள்!
1. போட்டியில் பங்குபெறுவர்கள் இந்திய குடிமகனாக இருத்த வேண்டும். அவர் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும்.
2. போட்டியில் பங்குபெறுவதற்காக 15 தனிப் பிரிவுகளை ஆதார் உருவாகியுள்ளது.
3. முக்கியமாக உங்களின் ஆதார் உங்களின் வங்கி அக்கௌன்ட் உடன் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
4. இந்த 15 பிரிவுகளின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு ஆன்லைன் சேவையைப் போட்டியாளர் தேர்வு செய்து வீடியோ உருவாக்கிச் சமர்ப்பிக்க வேண்டும்.
#MyAadhaarOnline#Contest starts today. We have 15 categories of Aadhaar Online Services on which you can make tutorial videos. The most creative & expalnatory videos stand a chance to win Cash prize of up to Rs. 30,000. Participation details and T&C here: https://t.co/uu2je7d11Tpic.twitter.com/nhnrhNoFC1
— Aadhaar (@UIDAI) 18 June 2019
வீடியோ விதிமுறைகள்:
1. வீடியோ 30 நிமிடங்கள் முதல் 120 நிமிடங்கள் வரை இருக்கலாம். கிராபிகல்/ அனிமேஷன் வடிவில் வீடியோ இருக்க வேண்டும்.
2. ஒரு வீடியோவில் ஒரு சேவை குறித்த தகவல்கள் தான் இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்களையும் அனுப்பலாம். வீடியோவில் குரல் பதிவு தெளிவாக இருக்க வேண்டும்.
3. வீடியோ அனுப்ப வேண்டிய கடைசி நாள்: ஜூலை 8, 2019
4. இறுதி முடிவுகள் வெளியாகும் நாள்: ஆகஸ்ட் 31, 2019
ஆதார் வைத்திருப்பவர்களுக்கு ரூ. 30,000 தரும் அரசு! எப்படி பெற வேண்டும் தெரியுமா?
5. ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்வது, ஸ்டேட்டஸ் அப்டேட், ஆதார் கார்டில் விலாசம் மாற்றுவது, தொலைந்து போன ஆதாரை மறு பதிவிறக்கம் செய்தல். பயோ மெட்ரிக் லாக்/ அன்லாக் செய்தல், இ-மெயில், மொபைல் நம்பர் சரிபார்த்தல் உள்ளிட்ட சேவைகள் தொடர்பாக வீடியோ எடுக்க வேண்டும்.
#ContestAlert#MyAadhaarOnline There are 48 cash prizes to be won! Send in your videos in any of the 15 categories defined here: https://t.co/uu2je7d11Tpic.twitter.com/Wpkcnbbuoc
— Aadhaar (@UIDAI) 21 June 2019
பரிசு நிலவரங்கள்:
1. மொத்தமுள்ள 15 ஆதார் சேவைகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் மூவர் தேர்ந்தெடுக்கபடுவர். அதில் முதல் பரிசு - ரூ.20,000 இரண்டாம் பரிசு - ரூ.10,000 மூன்றாம் பரிசு - ரூ.5,000
எஸ்பிஐ-யில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இத்தனை ரூல்ஸையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமாம்!
2. இது தவிர ஒட்டுமொத்தமாக சிறந்த 3 வீடியோக்கள் தேர்வு செய்யப்படும். அவற்றிக்கு முதல் பரிசு - ரூ.30,000 இரண்டாம் பரிசு - ரூ.20,000 மூன்றாம் பரிசு - ரூ.10,000 வழங்கப்படும்.
3. மொத்தத்தில், 48 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். அனைத்து பிரிவுகளிலிருந்தும் மூன்று சிறந்த வீடியோக்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
4. முதல் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 30,000 ரொக்கப் பரிசும், இரண்டாம் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 20,000 ரொக்கப் பரிசும் மற்றும் மூன்றாம் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
5. இறுதி முடிவுகள் UIDAI இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.