இன்னும் நாள் இருக்கு.. மிஸ் பண்ணவங்களுக்கு மற்றொரு வாய்ப்பு! ஆதார் இருந்தால் ரூ. 30,000 கன்ஃபார்ம்.

My Aadhaar Online Contest Prize Rs 30,000 : இறுதி முடிவுகள் வெளியாகும் நாள்: ஆகஸ்ட் 31, 2019

By: Updated: July 13, 2019, 12:24:20 PM

my aadhaar online contest last date : ஆதார் சேவைகள் தொடர்பான சிறந்த வீடியோக்களை அனுப்பும் நபர்களுக்கு ரூ.30,000 வரையில் பரிசு வழங்கும் ஒரு போட்டியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவித்திருந்தது ஞாபகம் இருக்கிறதா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணவங்களுக்கு இன்னொரு சான்சை வழங்குகிறது மத்திய அரசு.

ஆம்! இந்த 30 ஆயிரம் ரூ பரிசை பெற வீடியோ அனுப்ப கடைசி நாளாக வரும் ஜூலை 8 என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இதன் தேதி ஜூலை 22 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

My Aadhaar Online Contest Prize Rs 30,000 : போட்டியில் என்ன செய்ய வேண்டும்?

ஆன்லைன் ஆதார் சேவைகளுக்கான டுடொரியல் குறுந்தகவல் வீடியோவை நீங்கள் உருவாக்கி அதனைப் பதிவு ஆதரவுடன் செய்ய வேண்டும். போட்டியில் பங்குபெறுவதற்காக 15 தனிப் பிரிவுகளை ஆதார் உருவாகியுள்ளது. இந்த 15 பிரிவுகளின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு ஆன்லைன் சேவையைப் போட்டியாளர் தேர்வு செய்து வீடியோ உருவாக்கிச் சமர்ப்பிக்க வேண்டும்.

my aadhaar online contest last date விதிமுறைகள்!

1. வீடியோ 30 நிமிடங்கள் முதல் 120 நிமிடங்கள் வரை இருக்கலாம். கிராபிகல்/ அனிமேஷன் வடிவில் வீடியோ இருக்க வேண்டும்.

2. ஒரு வீடியோவில் ஒரு சேவை குறித்த தகவல்கள் தான் இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்களையும் அனுப்பலாம். வீடியோவில் குரல் பதிவு தெளிவாக இருக்க வேண்டும்.

3. வீடியோ அனுப்ப வேண்டிய கடைசி நாள்: ஜூலை 22, 2019

4. இறுதி முடிவுகள் வெளியாகும் நாள்: ஆகஸ்ட் 31, 2019

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு ரூ. 30,000 தரும் அரசு! எப்படி பெற வேண்டும் தெரியுமா?

பரிசுத் தொகை விபரங்கள்:

மொத்தத்தில், 48 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். அனைத்து பிரிவுகளிலிருந்தும் மூன்று சிறந்த வீடியோக்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். முதல் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 30,000 ரொக்கப் பரிசும், இரண்டாம் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 20,000 ரொக்கப் பரிசும் மற்றும் மூன்றாம் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும். இறுதி முடிவுகள் UIDAI இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்படும்.

ஆதார் எண் இருந்தால் ரூ. 30,000 பரிசு. உடனே புறப்படுங்கள்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:My aadhaar online contest last date my aadhaar online contest prize rs

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X