scorecardresearch

1 கோடி மக்களை சென்றடைந்த என்.பி.எஸ்; இந்த சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்ய காரணம் என்ன?

முன்கூட்டியே திரும்பப் பெற விரும்பாதவர்கள் மற்றும் ஓய்வூதியத்திற்காக காத்திருப்பவர்கள், 60 வயதை எட்டும்போது, மொத்த தொகை மற்றும் ஒத்திவைக்கப்பட்ட ஓய்வூதியத்தை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை அவர்களால் தேர்வு செய்ய இயலும்.

National Pension System

ஓய்வூதியக்காரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS). இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1,43,90,544 இணைந்து புதிய மைல் ஸ்டோன் இலக்கை அடைந்துள்ளனர்.

இந்த கணக்கு துவங்க தேவையான தகுதிகள் என்ன?

18 வயது முதல் 70 வயது வரை உள்ள நபர்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைய முடியும். அதே நேரத்தில் பல்வேறு மூத்த குடிமக்கள் இதில் இணைய மற்றொரு காரணமும் இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் அவர்கள் ஓய்வூதிய கார்ப்பஸை பெற்றுக்கொள்ள இயலும். அதே போன்று பல்வேறு வரி சலுகைகளையும் அவர்களால் அடைந்து கொள்ள இயலும்

PRAN Account : மிகவும் எளிமையான வசதியான சேமிப்பு கணக்காக இது இருக்கிறது. இந்த சேமிப்பு திட்டம் துவங்கும் நபர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் வழங்கப்படும். குறைந்தபட்சம் ரூ. 500 கொண்டு இந்த கணக்கை ஒருவர் துவங்கலாம். ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ. 1000 வரவு வைக்கலாம். ஆனால் உச்ச வரம்பு ஏதும் இல்லை. செக், கேஷ், டி.டி. எஃப்.டி. மூலம் இந்தியாவில் அனைத்து பகுதியில் இருந்தும் இந்த கணக்கிற்கு நீங்கள் பணம் செலுத்த இயலும்.

ஃபண்ட் மேனேஜர் : கட்டுப்பாட்டாளரால் நியமிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்கள் பல்வேறு சொத்து வகுப்புகளில் முதலீடுகள் மூலம் சந்தாதாரர் நிதியை கவனமாக நிர்வகிக்கிறார்கள். இந்த செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கட்டுப்பாட்டாளரின் தீவிர கண்காணிப்பின் கீழ் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே பணத்தை எடுத்தல்

மிகவும் யூசர் – ஃப்ரெண்ட்லியாக இந்த சேமிப்பு கணக்கை கையாளும் வகையில், எந்த ஒரு அவசர தேவைக்காகவும் பணத்தை முன்கூட்டியே எடுக்க தேவையான செயல்முறைகளை இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே திரும்பப் பெற விரும்பாதவர்கள் மற்றும் ஓய்வூதியத்திற்காக காத்திருப்பவர்கள், 60 வயதை எட்டும்போது, மொத்த தொகை மற்றும் ஒத்திவைக்கப்பட்ட ஓய்வூதியத்தை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை அவர்களால் பெற முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: National pension system key features to know before opening an nps account

Best of Express