நீங்கள் ஒரு மில்லியனராக வேண்டுமெனில் மியூச்சுவல் ஃபண்ட், பங்கு சந்தை உள்ளிட்ட பல முதலீட்டு திட்டங்கள் சந்தையில் உள்ளன. ஆனால் பங்கு சந்தை போன்றவற்றில் கவனம் செலுத்திய போதிய அவகாசம் இல்லை எனில், சந்தையுடன் தொடர்பில் உள்ள தேசிய ஓய்வூதிய திட்டம் சிறந்த தேர்வாகும்.
சந்தையுடன் தொடர்பில் உள்ள இந்த திட்டத்தில் இரண்டு முறையில் உங்களது பணம் முதலீடு செய்யப்படுகிறது. ஒன்று பங்கு சந்தை (ஈக்விட்டி), மற்றும் கடன் சந்தை, அதாவது அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். நீங்கள் இதற்காக கணக்கினை தொடங்கும்போது 75% வரையில் ஈக்விட்டியில் முதலீடு செய்து கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் 25 வயதான ஒருவர் மாதம் 5,400 ரூபாய், அதாவது ஒரு நாளைக்கு 180 ரூபாய் என ஓய்வுகாலத்திற்காக 35 வருடங்கள் முதலீடு செய்கிறார். இந்த முதலீட்டிற்கு சுமார் 10% வருமானம் கிடைக்கிறது என வைத்துக்கொண்டால் ஓய்வுபெறும்போது அவரது கையில் 2.02 கோடி ரூபாய் இருக்கும்.
25 வயதில் முதலீடு
மாதம் 5,400 ரூபாய் முதலீடு
மொத்தம் 35 வருடம் முதலீடு
வருமான மதிப்பீடு - 10%
மொத்த முதலீட்டு தொகை - ரூ.22.68 லட்சம்
மொத்த வட்டி விகிதம் - ரூ.1.79 கோடி
மொத்த ஓய்வூதியம் - ரூ.2.02 கோடி
வரி சேமிப்பு - ரூ.6.80 லட்சம்
என்பிஎஸ் திட்டத்தில் சமீபத்தில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றியில் முக்கியமானது எஸ்பிஎஸ் சந்தாதாரர் நிபந்தனைகளுக்குட்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, முழு கார்பஸினையும் பெற முடியும். அதுவும் இந்த ஓய்வுதியம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் முழுமையாக பெற முடியும்.
மற்றவர்கள் பென்ஷனை முழுவதும் ஒரே நேரத்தில் பெற முடியாது. இதில் 60% மட்டுமே திரும்ப பெற முடியும். 40% நீங்கள் வருடாந்திர திட்டத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் மாத மாதம் உங்களுக்கு ஒரு வருமானமாக கிடைக்கும். 60% தொகையை எடுக்கும்போது 1.21 கோடி ரூபாய் தொகையை பெறலாம். வட்டி விகிதம் 6% என வைத்துக் கொண்டால், ஒவ்வொரு மாதமும் சுமார் 40,000 ஓய்வூதியமாக பெறலாம்.
ஓய்வூதிய கணக்கு விவரம்
வருடாந்திர திட்டத்தில் - 40%
வட்டி மதிப்பீடு - 6%
பெறப்பட்ட மொத்த தொகை - ரூ.1.21 கோடி
மாதாந்திர ஓய்வூதியம் - ரூ.40,477
30 வயதில் முதலீடு
மொத்தம் 30 வருடம் முதலீடு
மாதம் 5,400 ரூபாய் முதலீடு
வருமான மதிப்பீடு - 10%
மொத்த முதலீட்டு தொகை - ரூ.19.44 லட்சம்
வட்டி விகிதம் -ரூ.1.01 கோடி
மொத்த ஓய்வூதியம் - ரூ.1.20 கோடி
உங்களுடைய வயது அதிகரித்தால் ஓய்வூதியம் குறையும். இதனால் உடனடியாக சேமிப்பை தொடங்கலாம் அல்லது முதலீட்டினை அதிகரிக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil