NDTV நிறுவனர்கள் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் செய்தி ஒளிபரப்பு நிறுவனத்தில் தங்களுடைய மீதமுள்ள 32.26 சதவீத பங்குகளில் 27.26 சதவீதத்தை அதானி குழுமத்திற்கு விற்பதாக வெள்ளிக்கிழமை (டிச.23) தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, அதானி குழுமம் புது டெல்லி டெலிவிஷன் லிமிடெட் (NDTV) இல் தனிப்பெரும் பங்குதாரராக மாறியது. அதானி நிறுவனம் முதலில் நிறுவனர்களால் ஆதரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை வாங்கியது. அதன்பின்னர் திறந்த சந்தையில் இருந்து அதிக பங்குகளை வாங்கியது.
இந்த நிலையில், என்டிடிவி நிறுவனர்கள் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளனர். அந்த அறிக்கையில், “பரஸ்பர உடன்படிக்கையுடன் NDTV இல் உள்ள பெரும்பாலான பங்குகளை (அதானி குழுமம் நிறுவனம்) AMG மீடியா நெட்வொர்க்கிற்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.
இருவரும் சேர்ந்து என்டிடிவியில் 32.26 சதவீத பங்குகளை வைத்துள்ளனர், அதானி குழுமம் இப்போது நிறுவனத்தில் 37.44 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.
32.26 சதவீத பங்குகளில், தம்பதியினர் 27.26 சதவீதத்தை விற்பனை செய்வார்கள், அதே நேரத்தில் மற்ற சிறுபான்மை முதலீட்டாளர்கள் 5 சதவீத பங்குகளை நிறுவனத்தில் தக்க வைத்துக் கொள்வார்கள்.
பங்குச் சந்தைக்கு பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் அளித்த அறிக்கையில், “கெளதம் அதானி உடனான எங்கள் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருந்தன; நாங்கள் அளித்த அனைத்து ஆலோசனைகளும் அவர் சாதகமாகவும் வெளிப்படையாகவும் ஏற்றுக்கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/